வாங்காமம் ஒராபிபாஷா
வித்தியாலயத்தில் கடமையாற்றும்
அமீன் ஆசிரியரை இடமாற்றுமாறு
பைஸல் காசீம்
எம்.பியிடம் மக்கள் கோரிக்கை
வாங்காமம்
ஒராபிபாஷா வித்தியாலயத்தில் கடமையாற்றுவதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் அமீன் ஆசிரியரை இப்பாடசாலையிலிருந்து உடனடியாக
இடமாற்றம் செய்யுமாறு மேற்படி பாடசாலையின் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் பாடசாலைக்கு
விஜயம் செய்த முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காசீம் அவர்களிடம் நேரடியாக
கோரிக்கை விடுத்தனர்.
இன்று
12 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காசீம் இறக்காமத்திற்கு உட்பட்ட வாங்காமம்
ஒராபிபாஷா வித்தியாலயத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சில பொருட்களை
அப்பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்தார்.
இது
தொடர்பாக இடம்பெற்ற வைபவத்தில் ஆசிரியர்கள் மாத்திரமே பேசிவிட்டு கூட்டத்தை ஸலவாத்துச்
சொல்லி முடித்துவிட முனைந்தபோது கூட்டத்தில் இருந்த பாடசாலை நலன் விரும்பி ஒருவர் குறுக்கிட்டு
கூட்டத்தில் ஆசிரியர்கள் மாத்திரம்தான் பேசுவதா? பாடசாலை பெற்றார்கள், நலன்விரும்பிகள்
எவரும் இப்பாடசாலையின் குறைகள், தேவைகள் பற்றிப் பேசுவதற்கு இடமில்லையா?
இப்பாடசாலையில்
கற்பிக்கும் அமீன் ஆசிரியர் 9.00 மணியளவில் பாடசாலைக்கு வருகை தந்து 10.00 மணிக்கு
பாடசாலையை விட்டு வெளியே சென்றுவிடுகின்றார். இவ்வாறு இந்த ஆசிரியர் கடமை செய்தால்
மாணவர்களின் கல்வி போதனை என்னவாகும். 8.00 மணிக்குப் பிறகு பாடசாலையின் வெளிக் கதவுக்கு
நாங்கள்தான் பூட்டுப் போட வேண்டியிருக்கும் என்று பெற்றார்கள் சார்பில் வேண்டுகோள்
விடுத்தார்.
இவரின்
வேண்டுகோளை செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காசீம் குறிப்பிட்ட ஆசிரியரை உடனடியாக
இப்பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்யுமாறு வலயக் கல்விப்பணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பாடாசாலை
பெற்றோர்கள், நலன் விரும்பிகள் விடுத்த கோரிக்கையையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல்
காசிம் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் விடுத்த வேண்டுகோள் சரியாக நடைமுறைப்படுத்தப்படுமா?
என வாங்காமம் மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
0 comments:
Post a Comment