உலகக் கிண்ணக் கிரிக்கெட்
லீக் ஆட்டங்களில்
35 சதங்கள் பதிவு
இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான
குமார் சங்கக்கார இதுவரை 4 சதங்கள்
உட்பட
496 ஓட்டங்கள் சேர்த்து முதலிடத்தில் இருக்கிறார்.
இந்த
ஆண்டு நடக்கும்
உலகக் கிண்ணக்
கிரிக்கெட் போட்டியில் இதுவரை நடந்து
முடிந்த லீக்
ஆட்டங்களில் மொத்தம் 35 சதங்கள் பதிவாகி உள்ளன.
இலங்கை
அணியின் முன்னணி
துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்கார இதுவரை 4 சதங்கள்
உட்பட 496 ஓட்டங்கள்
சேர்த்து முதலிடத்தில்
இருக்கிறார். இதன் மூலம் ஒரு உலகக் கிண்ணப்
போட்டியில்
மட்டுமின்றி, ஒருநாள் போட்டியிலும் தொடர்ந்து 4 சதங்கள்
அடித்த முதல்
வீரர் என்ற
சாதனையை அவர்
படைத்து இருக்கிறார்.
குமார்
சங்கக்காரவுக்கு அடுத்தபடியாக கால் இறுதி
வாய்ப்பை இழந்த
ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட வீரர் பிரன்டன்
டெய்லர் 2 சதங்கள்
உட்பட 433 ஓட்டங்கள்
எடுத்துள்ளார். இந்தியாவின் ஷிகர் தவான், இலங்கை
வீரர் தில்சான்,
ஜிம்பாவே டெய்லர்,
வங்காளதேச வீரர்
முஹமதுல்லா ஆகியோர், நடைபெறும் உலகக் கிண்ணத்தில் இதுவரையில் 2 சதங்களை அடித்து உள்ளனர்.
நியூசிலாந்து,
பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரெட்ஸ் மற்றும்
ஸ்காட்லாந்து தலா ஒரு சதம் கண்டது.
இதுவரையில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில்
அதிகமாக சதம்
அடித்த வீரர்கள்
பட்டியலில் இந்திய நட்சத்திர வீரர் சச்சினே
முதலிடத்தில் உள்ளார். அதிக ஓட்டங்கள் அடித்த
வீரர் பட்டியலிலும்
அவரே முதலிடத்தில்
உள்ளார்.
நேற்று
முன்தினத்துடன் லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன.
நாளை (புதன்கிழமை)
கால் இறுதி
ஆட்டங்கள் தொடங்குகிறது.
இந்த கால்
இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து,
ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம் (ஏ பிரிவு),
இந்தியா, தென்
ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் (பி
பிரிவு) ஆகிய
அணிகள் மோத
உள்ளன.
0 comments:
Post a Comment