சாய்ந்தமருது மக்கள் சார்பில்
ஜனாதிபதிக்கு சிராஸ் மீராசாஹிப் மகஜர்.
(அகமட் எஸ். முகைடீன்)
அதிமேதகு
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்களால்
முன்னெடுக்கப்பட்டுவரும் 100 நாள் வேலைத்திட்டத்தின்
கீழ் சாய்ந்தமருதுக்கான
நகரசபையினை பிரகடனப்படுத்துமாறு கோரிய மகஜரினை ஜனாதிபதி
அவர்களுக்கு கல்முனை மாநகர சபையின் முன்னாள்
முதல்வர் கலாநிதி
சிராஸ் மீராசாஹிப்
நேற்று 30 ஆம்
திகதி அனுப்பிவைத்துள்ளார்.
இது
தொடர்பில் சிராஸ்
மீராசாஹிப் கருத்துத் தெரிவிக்கையில் சாய்ந்தமருது வாழ்
மக்களின் நீண்ட
நாள் அரசியல்
அபிலாஷையான தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையினை
வென்றெடுப்பதற்காக சாய்ந்தமருது மக்களின்
துணையோடு பல்வேறு
பிரயர்தனங்களை நான் மேற்கொண்டேன். எனது ஆத்மாத்ம
ரீதியான அம்முயற்சி
கைகூடி வந்த
தறுணத்தில் காழ்ப்புணர்ச்சி கொண்ட வங்குரோத்து அரசியல்
வாதிகளினால் முட்டுக் கட்டை போடப்பட்டது. இதனால்
மலரவிருந்த உள்ளூராட்சி மண்றம் இறுதி வினாடிகளில்
கைநழுவியது. இதனை யாவரும் அறிவீர்கள்.
சாய்ந்தமருது
மக்களின் உணர்வுகளை
புரிந்து கொள்ள
முனையாது உள்ளூராட்சி
மன்றக் கோரிக்கைக்கு
அன்று தடைகளை
ஏற்படுத்தியவர்கள் இன்று அக்கோரிக்கைக்காக
தங்களால் முடியுமான
முயற்சிகளை முன்னெடுப்பதாக தெரிவித்திருப்பது
வேடிக்கையாக இருந்தாலும் அது உணர்வுபூர்வமானதாக அமைய வேண்டும் என இறைவனைப்
பிராத்திக்றேன்.
சாய்ந்தமருது
பள்ளிவாசல் இக்கோரிக்கை தொடர்பில் அக்கறை எடுத்திருப்பது
மிக மன
மகிழ்வினை ஏற்படுத்துகின்றது.
எதிர்காலத்தில் இக்கோரிக்கைக்காக கட்சி பேதமின்றி எவ்வித
எதிர்பார்ப்புகளுக்கும் அப்பால் நின்று
கைகூடிவருகின்ற தறுணத்தில் தடை ஏற்படுத்தாது ஒற்றுமையுடன்
ஒருமித்து செயற்பட
வேண்டும்.
அதிமேதகு
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்களின்
நல்லாட்சியில் முன்னெடுக்கப்படுகின்ற 100 நாள்
வேலைத்திட்டத்தில் சாய்ந்தமருது மக்களின்
நீண்ட நாள்
கனவான தனியான
உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையினை நனவாக்குமாறு வேண்டி
சாய்ந்தமருது மக்கள் சார்பில் அதிமேதகு ஜனாதிபதி
அவர்களுக்கு இக்கோரிக்கையினை நான் அனுப்பிவைத்துள்ளேன். அத்தோடு இதற்கு உறுதுணை வழங்குமாறு
பல்வேறு அரசியல்
தலமைகளையும் வேண்டியிருப்பதோடு அதற்கான சந்திப்புக்களையும் மேற் கொண்டுள்ளேன். அவை அனைத்தும்
நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்த ஒவ்வொரு சாய்ந்தமருது
பிரஜையும் இறைவனிடம்
கையேந்த கடமைப்பட்டுள்ளீர்கள்.
என்றும் என்
இதயத்தில் குடியிருக்கின்ற
மக்களின் நலனுக்காய்
என் இதயத்தில்
துடிப்பிருக்கும் வரை அச்சாணியாய் செயற்படுவேன் எனத்
தெரிவித்தார்.
சோனகனை காட்டிக் கொடுத்த
சோக்கான கடிதம்!
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சாய்ந்தமருதுக்கான
நகரசபையினை பிரகடனப்படுத்துமாறு கோரி கல்முனை மாநகர
சபையின் முன்னாள்
முதல்வரும் நான் மனதளவில் விருப்பமுடன் நேசிப்பவருமான
நண்பர் கலாநிதி
சிராஸ் மீராசாஹிப்
அவர்கள் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு இரண்டு பக்கங்கள்
கொண்ட கடிதம்
ஒன்றினை எழுத்தியுள்ளார்.
இந்த
விவகாரத்தில் நான் அவருடன் எந்த வகையிலும்
ஒத்துப் போகவே
மாட்டேன். ஜனாதிபதிக்கு
அவர் அனுப்பி
வைத்துள்ள இந்தக்
கடிதமானது ஒரு
வெட்கம் கெட்ட
வேலையாகவே என்னால்
கருத முடியும்.
”சாய்ந்தமருது
வாழ் மக்களின்
நீண்ட நாள்
அரசியல் அபிலாஷையான
தனியான உள்ளூராட்சி
மன்றக் கோரிக்கையினை
வென்றெடுப்பதற்காக சாய்ந்தமருது மக்களின்
துணையோடு பல்வேறு
பிரயத்தனங்களை நான் மேற்கொண்டேன். எனது ஆத்மாத்த
ரீதியான அம்முயற்சி
கைகூடி வந்த
தருணத்தில் காழ்ப்புணர்ச்சி கொண்ட வங்குரோத்து அரசியல்வாதிகளினால்
முட்டுக்கட்டை போடப்பட்டது.” என அவர் அந்தக்
கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிக்கு
அனுப்பக் கூடிய
ஒரு கடிதத்தில்
இவ்வாறெல்லாம் சாடல்களையும் சரிவுகளையும் சுட்டிக் காட்டுவது
எந்த வகையிலும்
பொருத்தமானது அல்ல.
மேலும்
ஒரு தனி
நபராக நின்று
இவ்வாறெல்லாம் கடிதங்களைப் பறிமாறுவதால் நடக்கப் போவதும்
ஒன்றும் அல்ல
என்பதனையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
மஹிந்த ராஜபக்க்ஷ
ஆட்சிக் காலத்தில்
முன்னாள் அமைச்சர்
ஏ.ஆர்.
மன்சூர் மட்டக்களப்பிலிருந்து
பொத்துவில் வரை ரயில் பாதை அமைக்குமாறு
கோரி அவருக்கு
எத்தனையோ கடிதங்களை
அனுப்பி, அனுப்பியே
சோர்ந்து விட்டார்.
ஒன்றுமே நடந்தபாடில்லை.
முன்னாள் அமைச்சர்
என்ற அந்தஸ்து,
உரிமை என்ற
அடிப்படையில் மன்சூர் அவ்வாறு கோரிக்கைகளை விடுத்தும்
எதுவுமே நடக்காத
நிலையில் முன்னாள்
கல்முனை மேயர்
என்பதற்காக இன்றைய ஜனாதிபதி மைத்திரி என்ன
தலையில் வைக்கவா
போகிறார் என்பதனை
நண்பர் சிராஸ்
மீராசாகிப் புரிந்து கொள்ள வேண்டும்.
சாய்ந்தமருதுக்கான
நகரசபையின் தேவை குறித்து ஜனாதிபதி மைத்திரிக்கும்
கடிதம் எழுதிப்
பார்த்தேன் அவரும் ஒன்றும் செய்கிறார் இல்லை
என்பதற்கான ஆதாரமாக இந்தக் கடிதத்தை மக்களிடம்
காட்டி செல்வாக்கு
பெற முயற்சிக்கலாமே
தவிர ஒன்றும்
நடக்கப் போவதில்லை
நண்பரே!
மேலும்
குறித்த கடிதத்தில்
”காழ்ப்புணர்ச்சி கொண்ட வங்குரோத்து அரசியல்வாதிகளினால் முட்டுக்கட்டை போடப்பட்டது”
என்றும் குறிப்பிடுகிறார்.
ஒரு நாட்டின்
தலைமைக்கு எழுதும்
கடித்தத்தில் இவ்வாறெல்லாம் குறிப்பிடுவது
என்னைப் பொறுத்த
வரை நாகரிகமாக
தெரியவில்லை. இவ்வாறு குறிப்பிடுவதனைக் கொண்டு சிராஸ்
மீராசாகிப் பற்றியே ஜனாதிபதி எடைபோட முடியும்.
சாய்ந்தமருதுக்கான
நகரசபை விடயத்தில்
நமது அரசில்வாதிகள்
பிழை விட்டது
உண்மைதான். ஆனால் அதனை எல்லாம் புதிய
ஜனாதிபதியிடம் காட்டிக் கொடுப்பதன் மூலம் நம்மை
நாமே காட்டிக்
கொடுக்கிறோமே தவிர வேறொன்றும் நடக்கப் போவதில்லை.
மைத்திரியிடம்
சிராஸ் கூறிவிட்டார்
என்பதற்காக நாளை விடிவதற்குள் சாய்ந்தமருது நகர
சபையாகி விடப்போவதில்லை.
அவரும் இதனைப்
பற்றி ஹக்கீமிடம்
கேட்பார். ஏன்
அவர் கட்சிசார்ந்த
அனைத்து முஸ்லிம்
கட்சி பிரதிநிதிகளிடம்
கேடடுத்தானே செய்வார்? சாய்ந்தமருதுக்கான
நகரசபை விவகாரம்
பேசித் தீர்க்க
கூடிய வகையில்
நகர்த்தப்பட வேண்டி விடயமே தவிர, பேனா
நண்பனுக்கு கடிதம் எழுதுவது போன்ற ஒரு
விடயமல்ல.. (தனி நபர் தொடர்பாடல் என்ற
வரையறைக்குள் மட்டும்)
மேலும்
இப்படியான ஆத்திரமூட்டும்
வார்த்தைகள் சில வேளைகளில் சாய்ந்தமருதுக்கான நகரசபை கனவை வெறுங் கனவாக்கியே
விடலாம் என்பதனை
நண்பர் சிராஸுக்கு
தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும்
சாய்ந்தமருது மக்களில் அதிக எண்ணிக்கையானோர் முஸ்லிம்
காங்கிரஸ் ஆதரவாளர்களாகவே
இருக்கினறனர். அந்த ஊரில் கட்சியின் தொண்டர்கள்
பட்டியல் என்பது
வேறு. இவர்களும்
மற்றும் பள்ளிவாசல்
நிர்வாகம், ஊர் புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள்
அனைவரும் ஒன்றிணைந்து
அமைச்சர் ஹக்கீமிடமிடம்
ஏனைய அரசியல்வாதிகளிடமும்
நேரடியாகவே இந்த விடயத்தை பேசி ஏன்
தீர்க்க முடியாது?
சிராஸ்
மீராசாகிப் இந்த விடயத்தைக் கையாளுகிறார் என்ற
ஒரு காரணத்துக்காவும்
சாய்ந்தமருதுக்கான நகரசபை விடயத்தில்
சில முஸ்லிம்
அரசியல்வாதிகள் அக்கறை செலுத்தாமலும் இருக்கலாம் அல்வா?
0 comments:
Post a Comment