சவூதி உள்ளூராட்சித் தேர்தலில்
19 பெண் வேட்பாளர்கள் வெற்றி
சவூதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் 19 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சவூதியில் முடியாட்சி நடைமுறையில் உள்ளது. அங்கு உள்ளூராட்சி அமைப்புகளுக்கு சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது.
சவூதி வரலாற்றில் முதல் முறையாகப் பெண்கள் அந்தத் தேர்தலில் பங்கேற்றனர். அவர்கள் வாக்களித்ததுடன், உள்ளூராட்சி அமைப்புகளில் கவுன்சிலர் பதவிக்காகப் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் 19 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக சவூதி தேர்தல் ஆணையர் ஒசாமா அல்-பார் அறிவித்தார். முஸ்லிம்கள் மிகப் புனிதமாகக் கருதும் மக்கா நகரில் உள்ள மத்ராக்கா கவுன்சில் தொகுதியில் போட்டியிட்ட சல்மா பிந்த் அல்-உடேபி வெற்றி பெற்றார்.
அவருக்கு எதிராக 2 பெண் வேட்பாளர்களும் 7 ஆண் வேட்பாளர்களும் போட்டியிட்டனர் என்று அச்செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இதை தவிர ஜெட்டா, அல்-ஜாவஃப், தபூக், இஷா உள்ளிட்ட பகுதிகளில் பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.
வாக்களித்ததுடன், உள்ளூராட்சி
அமைப்புகளில் கவுன்சிலர் பதவிக்காக 979 பெண் வேட்பாளர்கள்
போட்டியிட்டனர். ஆண் வேட்பாளர்களின் எண்ணிக்கை சுமார் 6,000 என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து இடங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற நிலையில், 19 பெண் வேட்பாளர்கள்
வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அந்நாட்டின் உள்ளூராட்சி
அமைப்புகளில் மொத்த இடங்கள் சுமார் 2,100 ஆகும். இந்த
நிலையில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் கவுன்சிலர்களின் எண்ணிக்கை சுமார் 1
சதவீதமாக உள்ளது.
முஸ்லிம்கள் மிகப் புனிதமாகக் கருதும் மக்கா நகரில் உள்ள மத்ராக்கா கவுன்சில் தொகுதியில் போட்டியிட்ட சல்மா பிந்த் அல்-உடேபியின் வெற்றி முதலில் அறிவிக்கப்பட்டது. அந்நாட்டின் தலைநகர் ரியாத் மிகவும் பழமைவாத நகரம் எனக் கூறப்படுகிறது. அங்கு 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
ஜெட்டா, அல்-ஜாவஃப், தபூக், இஷா உள்ளிட்ட பகுதிகளில் பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். சவூதியில் சிறுபான்மையினராக உள்ள ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் கிழக்கு மாகாணத்தில் 4 பெண்கள் வெற்றி பெற்றனர்.
சாலைகள் அமைப்பது, பச்சிளம் குழந்தைகளுக்கான காப்பகம், விளையாட்டரங்கம் அமைத்தல், நகர கழிவு அகற்றம் ஆகியவை பெண்களின் முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளாக இருந்தன.
முடியாட்சி நடைமுறையில் உள்ள அந்த நாட்டில் உள்ளூராட்சி
அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்று வருகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் காலமான சவூதி மன்னர் அப்துல்லா, உள்ளூராட்சி
அமைப்பகளுக்கான தேர்தலில் பெண்கள் போட்டியிடுவதற்கான அரச கட்டளையை 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட பிறகு நடைபெறும் முதல் உள்ளூராட்சித்
தேர்தல் இதுதான்.
சவூதி அரேபியாவின் மக்கள்தொகை ஏறக்குறைய 2.1 கோடியாகும். சுமார்
15 லட்சம் பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்திருந்தனர் என்று தேர்தல் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. இதில் சுமார் 1.19 லட்சம் பேர்
மட்டுமே பெண்கள்.
ஆண்களிடையே பெண் வேட்பாளர்கள் நேரடியாகப் பிரசாரம் செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளுடன் பெண் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்குத் தனி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. தேர்தல் மூலம் உள்ளூராட்சிக்
கவுன்சில் உறுப்பினர்களாவது தவிர, மேலும் 1,050 உறுப்பினர்கள், உள்ளூராட்சி விவகாரத் துறை அமைச்சகத்தால் நேரடியாக நியமிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில், அதிக அளவில் பெண்கள் நியமன உறுப்பினர்களாவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment