பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்
கைத்துப்பாக்கி கைப்பற்றிய
விவகாரம்
பாதுகாப்பை சோதிக்கும்
நடவடிக்கையாம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வத்திக்கானிலிருந்து நாட்டிற்கு
வருகை தந்த நேரத்தில், கைத்துப்பாக்கி ஒன்றுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க
சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நபர், சிவில் விமான
சேவைகள் அதிகாரசபையைச் சேர்ந்த ஒருவர் என அறிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய்வதற்காகவே குறித்த நபர் அனுப்பப்பட்டுள்ளதாகவும்
தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. காலில் துப்பாக்கியொன்றைக் கட்டியிருந்த அவர், விமானங்கள்
நிறுத்தப்படும் இடத்தை நோக்கிச் செல்வதற்கு முயலும் போது, கைது செய்யப்பட்டிருந்தார். விமான நிலைய ஊழியர் ஒருவர் போன்றே அவர், சென்றிருந்தார்.
ஆனாலும், அவரது காலில் கட்டப்பட்டிருந்தது போலிக் கைத்துப்பாக்கியே
என வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த நபர், விமான நிலைய ஊழியர் எனவும், சிவில்
விமான சேவைகள் அதிகாரசபையால் அனுப்பப்பட்டவர் எனவும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் பாதுகாப்பு, சர்வதேச மட்டத்தில் காணப்படுகின்றதா
என்பதை உறுதிப்படுத்துவதற்கு, இவ்வாறான சோதனைகள் நடாத்தப்படுவதாகவும் சிவில் விமான
சேவைகள் அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment