நோபல் பரிசுப் பெற்ற தவக்குல் கர்மானிடம்
பத்திரிகையாளர் எழுப்பிய கேள்வியும் அதற்கான பதிலும்


நோபல் பரிசுப் பெற்ற எமன் நாட்டின் தவக்குல் கர்மானிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வியொன்றை எழுப்பினார்!
ஏன் நீங்கள் ஹிஜாபை அணிகின்றீர்கள் ? அது எவ்வாறு உங்களுடைய
கல்விக்கும், அறிவுக்கும் பொருந்துகிறது ?”  என்பதுதான் அந்த பத்திரிகையாளரின் கேள்வியாகும்.
தவக்குல் கர்மான் பத்திரிகையாளரின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்:

 “ஆதி மனிதர்கள் நிர்வாணமாக இருந்தார்கள். அவர்களுடைய அறிவு வளர்ச்சி அடைந்த பொழுது ஆடையை அணியத் தொடங்கினார்கள். நானும், எனது ஆடை முறையும் பிரதிபலிப்பது  மனிதன்  பெற்ற மிகவும் உன்னதமான கலாச்சாரத்தை ஆகும். மனிதன் மீண்டும் நிர்வாணமாக மாறுவது அவன் தனது தொடக்க காலத்தை நோக்கி செல்வதன் அடையாளமாகும்.” என்றார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top