விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு
அமைச்சர் ஹக்கீம் அனுதாபம்!
உம்ரா
பயணத்திற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக
சம்மாந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்
கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வரக்காபொளை
பிரதேசத்தில்; இடம்பெற்ற அகோர வாகன விபத்தில்
உறவினர்கள் ஆறு பேர் காலமான செய்தியை
அறிந்து தாம்
அதிர்ச்சியும், கவலையும் அடைந்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரும்,
நகர திட்டமிடல்
மற்றும்; நீர்வழங்கள்
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்த
துக்ககரமான சம்பவம் குறித்து அமைச்சர் ஹக்கீம்
வெளியிட்டுள்ள அறிக்கையில்; மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
புனித
மக்காவுக்கு செல்லும் நல்ல நோக்கத்துடன் அதற்கு
உரிய ஏற்பாடுகளை
கவனிப்பதற்காக கொழும்புக்குச் சென்றுக் கொண்டிருந்த வேளையில்,
குழந்தைகள் உட்பட சம்மாந்துறையைச் சேர்ந்த அறுவர்
இவ்வுலக வாழ்க்கையை
துறக்க நேர்ந்த
சம்பவத்தினால் சம்மாந்துறையில் மட்டுமல்லாது,
பொதுவாக நாட்டு
மக்கள் சோகத்தில்
ஆழ்ந்துள்ளனர்.
இத்துயரத்தில்
தனிப்பட்ட முறையிலும்
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் சார்பிலும்
நானும் பங்குகொள்ளுகின்றேன்.
அத்துடன், இவ்வுலக
வாழ்வு நிரந்தரமற்றது
என்ற காரணத்தினால்,
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்த சோக முடிவினை தாங்கிக்கொள்கின்ற
மனவலிமையை எல்லாம்
வல்ல அல்லாஹ்
வழங்க வேண்டுமெனவும்
பிரார்த்திக்கின்றேன்.
விபத்தில்
காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ஏனையோர் சுகமடையவும்,
மரணமானவர்கள் மேலான சுவன வாழ்வை அனுபவிக்கவும்
அல்லாஹ்வை இறைஞ்சுகின்றேன்.
![]() |
விபத்தில் வபாத்தானவர்கள். |
![]() |
விபத்துக்குள்ளான வண்டி |
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.