இந்திய மீனவரின் ஜனாஸா

மன்னார் உப்புக்குளம் முஸ்லிம் மையவாடியில் அடக்கம்

(நஸ்ரிப் அஹமட்)

தலைமன்னார் கடற்பரப்பில் மீட்கப்பட்ட காணாமல் போன இந்திய மீனவர் ஒருவரின் ஜனாஸா நேற்று (15.12.2015 செவ்வாய் )மாலை மன்னார் உப்புக்குளம் ஜனாஸா முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடற்தொழிலுக்குச் சென்ற போது கடந்த 29 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த மீனவர்களை தொடர்ச்சியாக தேடி வந்த நிலையில் கடந்த 4 ஆம் திகதி (4-12-2015) இரவு தலைமன்னார் கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது.
தலைமன்னார் கடற்படையினரின் உதவியுடன் குறித்த சடலம் மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த சடலத்தின் கை பகுதியில் எச்.றுபினா என பச்சை குத்தப்பட்டிருந்தமை அடையாளம் காணப்பட்டது.
இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தினூடாக குறித்த தகவல் இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டதோடு சடலமாக மீட்கப்பட்ட மீனவரின் புகைப்படமும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது குறித்த சடலம் காணாமல்போன 4 இந்திய மீனவர்களின் ஒருவரான ராமேஸ்வரம் ராமநாதபுரம் சல்லி மலை கிராமத்தைச் சேர்ந்த யாகீர் ஹீசைன்(வயது-40) என அடையாளம் காணப்பட்டது.
குறித்த சடலம் இந்தியாவிற்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் நீண்ட நாட்களாக மன்னார் பொது வைத்தியசாலையில் பிரதே அறையில் வைக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த மீனவர்  இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் எனபதனால் அவரது ஜனாஸா இஸ்லாம் மதத்தின் முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என இந்திய துணைத்தூதுவர் என்.நடராஜன் மன்னார் மாவட்ட மீனவ சமாசத்தின் தலைவர் என்.எம்.ஆலம் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
மன்னார் உப்புக்குளம் மஸ்ஜித் பரிபாலகர்களின் சபையூடாக குறித்த இந்திய மீனவரின் ஜனாஸா  இன்று மாலை மன்னார் உப்புக்குளம் மஸ்ஜிதுக்கு கொண் செல்லப்பட்டு உப்புக்குளம் முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜனாஸா நல்லடக்கத்தின்போது உப்புக்குளம் கிராம மக்கள், இந்திய துணைத்தூதுவராலய அதிகாரிகள்,பொலிஸ் அதிகாரிகள் எனப் பலர்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top