சிட்னியில் ஆலங்கட்டி
மழையுடன் புயல் தாக்கியதில்
ஆஸ்திரேலிவியாவின்
தெற்கு சிட்னி
நகரில் ஆலங்கட்டி
மழையுடன் புயல்
தாக்கியதில் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு
213 .மீ.
வேகத்தில் தாக்கிய
புயலால் மரங்கள்
வேரோடு சாய்ந்தன.
கார்கள் மற்றும்
வீடுகள் கடும்
சேதம் அடைந்தன.
தொடர்மழையால் நகரின் பல பகுதிகளிலுள்ள வீதிகளில்
வெள்ளம் கரைபுரண்டு
ஓடுகின்றது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடு மற்றும்
அலுவலகத்தில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் நகரின் பல
பகுதிகள் இருளில்
மூழ்கியுள்ளன என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆலங்கட்டி மழை ஒவ்வொன்றும் ஒரு கிரிக்கெட் பந்தின் அளவில் விழுந்ததால் மக்கள் பீதியுடன் கூச்சலிட்டபடி ஓட்டம் பிடித்தனர். சுழற்றியடித்த புயல் காற்றுடன் தொடர்ந்துபெய்த ஆலங்கட்டி மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சில வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன. கார்கள் தலைகீழாக புரட்டிப் போடப்பட்டு குப்புற கவிழ்ந்து கிடந்தன.
சிட்னி
நகரின் சர்வதேச
விமான நிலையத்தில்
விமானச் சேவைகள்
ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும். மக்களின் இயல்பு
வாழ்க்கை பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment