ஆசிய அபிவிருத்தி வங்கி,
உலக வங்கி என்பனவற்றின்அனுசரணையுடன்
கண்டி நகரை அபிவிருத்தி செய்ய பாரிய நகர அபிவிருத்தி திட்டம்
நாடாளுமன்றத்தில் அமைச்சர் ரவூப்ஹக்கீம் தெரிவிப்பு
கண்டி நகரை அபிவிருத்தி செய்ய பாரிய நகர அபிவிருத்தி திட்டமொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவுப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்,
2016ஆம் ஆண்டுக்காக நகர அபிவிருத்தித் திட்டத்திற்காக 2500 மில்லின் ரூபாவை அமைச்சு ஒதுக்கியுள்ளது. 100 சிறிய நகரங்களுக்கு நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்ய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் கீழ் தெரிவு செய்யப்பட்ட நகர எல்லைக்குள் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கண்டி நகரை அபிவிருத்தி செய்ய தற்போது செயற்படும் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி என்பனவற்றின் அனுசரணையுடன் முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலதிகமாக ஜப்பான் வழங்குவதாக உறுதியளித்துள்ள சுமார் ஒரு பில்லியன் ரூபாவினூடாக பாரிய அபிவிருத்திகளுக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்தோடு, நகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து திட்டமிடல்களை மேற்கொண்டு வருகிறோம். மூலோபாய நகர அபிவிருத்திட்டங்கள் காணப்படுகின்றன. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் காலி, யாழ்ப்பாணம், உட்பட பல நகரங்களில் காணப்படுகின்றன.
மேலும், கட்டம் கட்டமாக இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment