வத்திக்கானுக்குச் சென்றிருந்த
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டை வந்தடைந்தார்

பாப்பரசரைச் சந்திப்பதற்காக வத்திக்கானுக்குச்  சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈகே 650 விமானத்தில், இன்று காலை 8.30க்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையைத்தை வந்தடைந்தார்.
வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட வெளியுறவுத்துறைச் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட்,  ஆகியோரையும் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இலங்கை வரலாற்றில் இடம்பெற்றுள்ள சில முக்கியமான விடயங்கள், அமைதி மற்றும் ஒப்புரவு நடவடிக்கைகள், சமுதாயத்தில் பல்வேறு துறைகளில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றி வரும் பணிகள், மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top