முஸ்லிம் பெண்களின் கல்விக்கு
வழிகாட்டிய விடிவெள்ளி
கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பர்
கல்முனையின் கல்வித்துறை வளர்ச்சியில் கேற்முதலியார் மர்ஹும் எம்.எஸ். காரியப்பர் அதிக
அக்கறை காட்டினார்.
இவர் வன்னியனாராகக்
கடமையாற்றிய காலத்தில் கல்முனைப் பிரதேசத்தில்
பல பாடசாலைகளை ஆரம்பிப்பதில் முன் நின்றார். அதிலும் குறிப்பாக பெண்களின் கல்வி முன்னேற்றத்தில்
அதிக அக்கறை காட்டினார்.
அக்கால கட்டத்தில்
விரல்விட்டு எண்ணக்கூடிய ஆண்கள் மட்டும் கல்வியைப் பெற்றுக்கொண்ட அதேவேளை
பெண்களைப் பொறுத்தவரையில் அனைவருமே பாடசாலைக்குச் சென்று கல்வி கற்பதில்
நாட்டமில்லாதவர்களாகவே இருந்து வந்தனர். ஆனால், (குர்ஆன் பாடசாலை)களுக்குச்
சென்று, குர்ஆனை வாசிக்கக் கற்றுக் கொள்ளும் வழமை அவர்களிடம் இருந்து வந்தது.
அன்று
சாய்ந்தமருதிலும், கல்முனைக்குடியிலும் சில கலவன் பாடசாலைகள் இயங்கி வந்தாலும்
அப்பாடசாலைகளில் 5 ஆம் வகுப்பு வரை மாத்திரமே கல்வி கற்கக்கூடியதாக இருந்தது.
சாய்ந்தமருதில் 1894
ஆம் ஆண்டில் மெதடிஸ்த மிஸனரிப் பாடசாலை ஒன்று கல்முனை ஸாஹிறாக் கல்லூரி
வீதியிலும், 1913 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01ஆம் திகதி சாய்ந்தமருது பிரதான வீதியில்
ஆரம்பிக்கப்பட்ட அரசினர் தமிழ் கலவன் பாடசாலை (தற்பொழுது அல்-ஹிலால் வித்தியாலயம்)
ஆகியன அமைந்திருந்தன.
இப்பாடசாலைகளில்
பெண்கள் கல்வி கற்க விரும்பாததன் காரணமாக பெண்களுக்கு என்று தனிப் பாடசாலைகள்
அமைக்கப்பட வேண்டுமென்று கேற்முதலியார்
மர்ஹும் எம்.எஸ். காரியப்பர் எண்ணி
அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
சம்மாந்துறை,
நிந்தவூர், கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மருதமுனை போன்ற கிராமங்களில் உள்ள
ஜும்ஆப் பள்ளிவாசல்களுக்கு கல்முனை முஸ்லிம் முன்னேற்றச் சங்க முன்னோடிகளுடன்
சென்று ஜும்ஆத் தொழுகைக்குப் பின் பெண்கள் கல்வி கற்பதன் அவசியம் பற்றி பிரசாரங்களை
மேற்கொண்டார்.
பெண்களின் கல்வியில்
கூடிய அக்கறை கொண்டிருந்த கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் பெண்களுகென்று
தனிப்பாடசாலைகளை ஆரம்பித்தார்.
இவர் வன்னிமையாக
இரு,ந்தபோது 6 பாடசாலைகளையும் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையையும்
பாராளுமன்ற உறுப்பினர் காலத்தில் 13 பாடசாலைகளையும் உருவாக்கினார்.
கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் முயற்சியினால்
உருவாக்கப்பட்ட கல்விக் கூடங்கள்.
(ஒரே பார்வையில்)
பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட திகதி
|
பாடசாலை ஆரம்பிக்கும்போது இடப்பட்ட பெயர்
|
பாடசாலையின் தற்போதுள்ள பெயர்
|
01.05.1928
|
சாய்ந்தமருது
அரசினர் தமிழ் பெண்கள் பாடசாலை
|
அ.மு.க.பாடசாலை
|
11.01.1930
|
கல்முனைக்குடி
அரசினர் முஸ்லிம் தமிழ் பெண்கள் பாடசாலை
|
அல்-அஷ்ஹர்
வித்தியாலயம்
|
02.04.1936
|
கல்முனைக்குடி
அரசினர் தமிழ் பெண்கள் பாடசாலை
|
அஸ்-ஸுஹரா
வித்தியாலயம்
|
01.01.1940
|
மருதமுனை தமிழ்
பெண்கள் பாடசாலை
|
அல்-ஹம்றா
வித்தியாலயம்
|
1940
|
நீலாவணை
தமிழ் பெண்கள் பாடசாலை
|
விஷ்னு
வித்தியாலயம்
|
01.11.1941
|
அட்டாளைச்சேனை
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை
|
அட்டாளைச்சேனை ஆசிரியர்பயிற்சிக் கலாசாலை
|
25.05.1945
|
மாவடிப்பள்ளி
அரசினர் தமிழ் பெண்கள் பாடசாலை
|
அல்-அஷ்ரஃப்
மஹா வித்தியாலயம்
|
25.06.1948
|
கல்முனைக்குடி
அரசினர் தமிழ் பெண்கள் பாடசாலை
|
அல்-பஹ்ரியா மஹா
வித்தியாலயம்
|
16.11.1949
|
சாய்ந்தமருது
ஆங்கில கனிஸ்ட பாடசாலை
|
கல்முனை
ஸாஹிறா தேசிய பாடசாலை
|
01.03.1950
|
சம்மாந்துறை ஆங்கில
கனிஸ்ட பாடசாலை
|
சம்மாந்துறை தேசிய
பாடசாலை
|
01.09.1950
|
சம்மாந்துறை
கருவாட்டுக்கல் அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை
|
சம்மாந்துறை
அல்-மர்ஜான் மத்திய கல்லூரி
|
01.05.1951
|
சாய்ந்தமருது வடக்கு
அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை
|
சாய்ந்தமருது
அல்-ஜலால் வித்தியாலயம்
|
01.04.1952
|
சாய்ந்தமருது
தெற்கு அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை
|
சாய்ந்தமருது
மல்ஹருஸ் ஸம்ஸ் மஹா வித்தியாலயம்
|
27.07.1959
|
கல்முனைக்குடி தெற்கு
அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை
|
அல்-மிஸ்பாஹ் மஹா
வித்தியாலயம்
|
01.09.1959
|
சாய்ந்தமருது-2ம்
குறிச்சி அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை
|
சாய்ந்தமருது
றியாழுல் ஜன்னாஹ் வித்தியாலயம்
|
01.09.1959
|
சாய்ந்தமருது-1ம்
குறிச்சி அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை
|
சாய்ந்தமருது
அல்-கமறூன் வித்தியாலயம்
|
01.09.1959
|
மருதமுனை
கிழக்கு அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை
|
சம்சுல்
இல்ம் முஸ்லிம் மஹா வித்தியாலயம்
|
01.09.1959
|
மருதமுனை ஆலையடி
அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை
|
அல்.மனார் ஆரம்ப
பாடசாலை
|
01.09.1959
|
பெரிய
நீலாவணை அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை
|
புலவர்மணி
ஆ.மு.ஷரிபுத்தீன் வித்தியாலயம்
|
01.09.1959
|
பாண்டிருப்பு அரசினர்
முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை
|
அல்-மினன் முஸ்லிம்
வித்தியாலயம்
|
Very useful information about female education and the contribution made by the Gatemudliyaar. M.S.Kariapper
ReplyDeleteThanks
DeleteThanks
Delete