ஊடகவியலாளர் ஒன்றியத்தால் கெளரவிக்கப்பட்ட
சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.ஜுனைதீன்

கற்கும் காலத்திலிருந்தே (இந்தியாவிலிருந்து வெளிவந்த தாருஸ்ஸலாம், முஸ்லிம் முரசு, ரஹ்மத்) வாசிப்புத்துறையில் ஈடுபாடு கொண்ட ஜுனைதீன் பத்திரிகைத்துறையில் கொடிகட்டிப் பறந்த அமரர் எஸ்.டி சிவநாயகம் ஐயா அவர்களால் பரீட்சிக்கப்பட்டு 1979 ஆம் ஆண்டிலிருந்து அன்னாரை பிரதம ஆசிரியராகக் கொண்ட தினபதி,சிந்தாமணி பத்திரிகைகளின் சாய்ந்தமருது நிருபராகவும் பின்னர் கல்முனை நிருபராகவும் இணந்தார்.
இவரின் கன்னிச் செய்தி 1979.07.17 ஆம் திகதி “ஜம்இய்யத்துல் உலமா, கல்முனைக் கூட்டத்தில் குழப்பம் பொலிஸ் குண்டாந்தடிப் பிரயோகம்‘‘ எனும் தலைப்பில் தினபதி தேசியப் பத்திரிகையில் முதல் பக்கத்தில் செய்தியாக அன்று வெளிவந்தது.
5 ஆம் ஆண்டு தமிழ் பாடப் புத்தகத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உருவப் படம் ஒன்று வெளியிடப்பட்டிருந்ததை இவர் எடுத்துக்காட்டி தின்பதியில் அதிகமாக எழுதியதால் முஸ்லிம் அரசியல்வாதிகளையும் முஸ்லிம் இயக்கங்களையும் அதற்கு எதிராக செயல்படவைத்து உருவப்படம் பிரசுரிக்கப்பட்ட அனைத்துப் பாடப் புத்தகங்களையும் (90 ஆயிரம்) வாபஸ் பெறுவதற்கும் கல்வி அமைச்சரை முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கேட்பதற்கும் உதவினார்.

தினபதி மூடப்பட்டதை அடுத்து 1994 ஆம் ஆண்டிலிருந்து வீரகேசரியில் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் அதிகமான நூற்றுக்கும் மேற்பட்ட மேடைப் பேச்சுக்களை இவர் எழுதியுள்ளார். (ஒழுக்கம், சமூக ஒற்றுமை, இன ஒற்றுமை, கல்வி, அரசியல், பிரதேசவாதம், மானிட பண்புகள், தேசியக் கொடி என்பன போன்றவைகள் தொடர்பாக மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் அன்றைய மேடைப் பேச்சுக்கள் சிறப்பு வாய்ந்தவைகள் தற்கால இளைஞர்கள் அன்னாரின் அக்கருத்துக்களை அறிந்து கொள்ளும் வகையில் அப்பேச்சுக்கள் புத்தகமாக வெளிவரல் வேண்டும் என்பது இவரின் விருப்பங்களில் ஒன்றாகும்)
மர்ஹும் எம்.பி.எம் அஸ்ஹர் அவர்கள் நவமணி ஆசிரியராக இருந்த ஆரம்ப காலத்திலிருந்தே அப்பத்திரிகையை கல்முனைப் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவராகச் செயல்பட்டு அப்பத்திரிகையில் “ஸாதிக்குல் ஜன்னா‘‘ எனும் பெயரில் அதிக்மாக எழுதினார்.
சுடர் ஒளியில் கே.கே.இரத்தினசிங்கம் ஐயா அவர்களின் வழிகாட்டலில் சாய்ந்தமருது நிருபராக இணைந்து எம்.ஏ.சி.நஜீமா எனும் பெயரில் பிரதேச செய்திகளையும் அரசியல் செய்திகளையும் விமர்சனங்களையும் அதிகம் எழுதியுள்ளார்.
மக்களுக்காகவே செய்திகளை எழுதிவந்த இவரின் நடுநிலையான ஊடகப்பணியினை கருத்தில் கொண்டு 2001 ஆம் ஆண்டு மட்டக்களப்புஎஹட்‘‘ (EHED)  நிறுவனம், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசாரப் பேரவை என்பன விருது வழங்கி கெளரவித்துள்ளன.
திகாமடுல்ல மாவட்டத்தில் மறைந்த ஒரு அரசியல்வாதிக்கு ஏற்பட்டிருந்த ஒரு இக்கட்டான அரசியல் சூழ் நிலையில் அன்னார் பொத்துவில் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த மாளிகைக்காடு ஸபீனா வித்தியாலயத்தில் கவலையுடன் நிகழ்த்திய  மேடைப் பேச்சு ஒன்றை இவர் எழுதியிருந்தார். அப்பேச்சுதங்கத்தைப் போன்று புடம் போடப்படுகின்றேன்’” என தலையங்கம் இடப்பட்டு தினபதியில் வெளிவந்தது.
இந்தச் செய்தியைக் கண்டதும் மனசு உடைந்து போயிருந்த அந்த அரசியல்வாதிக்கு புது தெம்பு ஏற்பட்டுள்ளது. ஒரு பொது வைபவத்தில் சிரேஷ்ட ஊடக்வியலாளர் எம்..பகுறுதீன் அவர்களுடன் இவரைத் தேடி வந்து மனசு உடைந்து போயிருந்த எனக்கு புது தெம்பு ஊட்டி எழுதிய அந்த கையைத் தாருங்கள் என வேண்டி  முத்தம் கொடுத்தது இவருக்கு மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்று எனத் தெரிவிக்கின்றார்.
மக்கள் வங்கியில் பிரதி முகாமையாளரகக் கடமை செய்த இவர் 33 வருடங்கள் சேவை செய்த பின்னர் தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
எம்.ஏ.சி நஜீமாவின் அன்புக் கணவரான இவருக்கு றிஸ்வானுல் ஜன்னா, ஸாதிக்குல் ஜன்னா ஆகிய இரண்டு ஆசைச் செல்வங்களும் உள்ளனர். இவர் அகமதுலெவ்வை – சபூறா ஆகியோரின் சிரேஷ்ட புத்திரருமாவார்.
எல்லாப் புகழும் அனைத்து வல்லமையுமுள்ள அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ்







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top