“கல்முனை மாநகரம்; உள்ளூராட்சியும் சிவில் நிர்வாகமும்”
நூல் விமர்சனம்.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் சகோதரர் ஏ. எம். பறகத்துல்லாஹ்வின் “கல்முனை மாநகரம்; உள்ளூராட்சியும், சிவில் நிர்வாகமும்”
என்ற ஆய்வு நூல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
கல்முனையின் செழுமை மிகு வரலாற்றைப் பறைசாற்றுகின்ற பல நூல்கள் பல அறிஞர்களால்
தொகுக்கப்பட்டிருந்தாலும், சகோதரர் ஏ. எம் பறகத்துல்லாஹ் அவர்கள் இந்த நூல் மூலம்
தொட்டிருக்கும் கல்முனை குறித்த பரப்பானது இதற்கு முன்பு யாராலும் கவனம் செலுத்தப்படாத
ஆனால் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டிய பரப்பு என்பதே இந்த நூலின் சிறப்பம்சமாகும்.
குறிப்பாக கல்முனையின் முஸ்லிம் பூர்வீகம் தொடர்பாக சில தரப்பினரால் முன்வைக்கப்படும்
பல இட்டுக்கட்டல்களுக்கு தக்க தரவோடும், ஆதாரத்தோடும் பதில்களை முன்வைத்திருக்கிறார் நூலாசிரியர்.
கல்முனை மாநரகம் என்று அழைக்கப்படும் பிரதேசமானது வெள்ளையன் ஆட்சி செய்த காலம்
தொட்டு இன்று வரைக்கும் பல சிவில் நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அலகாக பிரகடனப்படுத்தபட்டு
நிர்வாகங்கள் நடந்து வந்துள்ளன. கல்முனை ஏலவே கரவாகுப்பற்றாக குறிக்கப்பட்டு சனிட்டார்
போர்ட், லோகல் போர்ட், பட்டின சபை, பிரதேச சபை, நகர சபை ஈற்றில் மாநகர சபையாக உருவெடுத்தது வரையில்
சகல சிவில் நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களையும் அதன் நிருவாக கட்டமைப்பையும், இன்னும் பல விடயங்களையும்
அலசி ஆராய்ந்துள்ளார் நூலாசிரியர்.
நான் அறிய, கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக இந்த நூலுக்குகாக பல ஆய்வுகளை மேற்கொண்டு பல
அறிய தரவுகளையும், ஆவணங்களையும் திரட்டி, உள்ளடக்கி நூல் வடிவில் வெளிவர முயற்சித்த அவரது வியர்வைக்கு
பெரிய பாராட்டுக்களும், நன்றிகளும். மேலும் முழு கல்முனை மாநகர மக்களும் அவரது
இந்த முயற்சிக்கு நன்றிக் கடமைப்பட்டுள்ளோம் என்றால் அது மிகையாகாது.
முனையூரான் முபாரிஸ்.
-
0 comments:
Post a Comment