டிசம்பர் 25-ல் அரிய முழுநிலவு தோன்றும்
நாசா தகவல்
நத்தார் தினமான டிசம்பர் 25 ஆம் திகதி வானில் உதிக்கவுள்ள முழுநிலவு மிகவும் அரிதானது என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த முழுநிலவு பெரியதாகவும் மிகவும் பிரகாசமனதாகவும் இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது.
1977-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி முழு நிலவு தோன்றவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இவ்வாறாக டிசம்பர் 25-ல் தோன்றும் முழுநிலவை ஃபுல் கோல்ட் மூன் (Full Cold Moon) என்ற அழைப்பது வழக்கமென்றும் அதற்குக் காரணம் குளிர்காலத்தின் தொடக்கத்தில் இந்த நிலவு தோன்றுவதே என்றும் நாசா விளக்கியுள்ளது.
இதன் பின்னர் 2034-ல் தான் மீண்டும் டிசம்பர் 25-ல் அதாவது நத்தார் தினத்தன்று முழு நிலவு தோன்றும் என்றும் நாசா கணித்துள்ளது.
0 comments:
Post a Comment