90-வது திருமண நாளைக் கொண்டாடியுள்ள ஜோடி
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைப் பிறப்பிடமாகவும் தற்போது இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோடி ஒன்று தங்களது 90-வது திருமண நாளை கொண்டாடி அசத்தியுள்ளனர்.
உலகிலேயே அதிக நாள்கள் கணவன்-மனைவியாக இணைந்து வாழ்ந்தவர்கள் இந்த ஜோடிதான் என்று நம்பப்படுகிறது.
பஞ்சாப்பில் உள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் கரம். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கர்தரிக்கும் கடந்த 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி சீக்கிய பராம்பரியம்படி திருமணம் நடைபெற்றது. அப்போது கரமுக்கு வயது 20. கர்தரிக்கு 13 எனத்
தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது, இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தனர் கரம்-கர்தரி தம்பதியினர்.
தற்போது வடக்கு யார்க்க்ஷைர் மாகானத்தில் பிராட்போர்ட் நகரில் இளைய மகன் பாலுடன் வசித்து வரும் இத் தம்பதியினருக்கு 8 குழந்தைகள், 27 பேரன்கள், 23 கொள்ளு பேரன்கள் உள்ளனராம்.
இந்நிலையில் இத்தம்பதியினர் தங்களது 90வது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளனர்.
என் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை நான் பார்த்ததே இல்லை. இதுதான் அவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கையின் இரகசியம் என்று தெரிவித்துள்ளார் அவர்களோடு வசித்து வரும் பால் என்பவர்.
திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து வாழ்வது என்பதில் என் பெற்றோர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். அதனால்தான் அவர்களால் ஒரு சிறு சண்டைகூட போடாமல் வாழ முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறியிருக்கும் இளைய மகன் பால், பெற்றோரை கவனித்து கொள்ளும் ஒவ்வொருவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். பெற்றோர் நம்மை பிரிந்துவிட்டால்...அவர்களோடு சேர்ந்து எல்லாம் போய்விடும் என்றும் கூறியுள்ளார்.
கரம்-கர்தரி ஜோடியினர் தங்களது 100 வயது எட்டியபோது, இங்கிலாந்து ராணி அவர்களைப் பாராட்டி கடிதம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment