வில்பத்து மற்றும் போதைப்பொருள் விற்பனை விவகாரம்

அமைச்சா் றிசாத் பதியுத்தீன் ஆனந்த சாகர  தேரா் நேரடி விவாதம்

ஹிரு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு?



அமைச்சா் றிசாத் பதியுத்தீன் வில்பத்து மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்வதனை நிருபிக்குமாறு விடுத்த சவாலை மாத்தறை  ஆனந்த சாகர தேரா் ஏற்றுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
இவ் விவாதம் ஹிரு தொலைக்காட்சியில் சலக்குன ("Salakuna" programme) நிகழ்ச்சியில் எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கள்கிழமை  இரவு 10 மணிக்கு இடம் பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் வில்பத்து மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்வதனை நிருபிக்குமாறும் அமில தேரர் எந்த வொரு தொலைக்காட்சியிலும் விவதாத்திற்கு வரலாம் என ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
தன்மீதும் வடபுல முஸ்லிம் அகதி சமூகத்தின் மீதும் அவதூறுகளையும் அபாண்டங்களையும் பரப்பி வரும் மாத்தறை ஆனந்த சாகர தேரருடன் எந்த இடத்திலும் தான் பகிரங்க விவாதம் நடத்த தயார் என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார்.

வில்பத்துவில் முஸ்லிம்கள் அத்துமீறி காட்டை அழிப்பதாகவும் அந்த காட்டை பயன்படுத்தி தான் போதை வஸ்து வியாபாரம் செய்வதாகவும் கொழும்பு விகாரமகா தேவி பூங்காவிற்கு எதிரில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தி கருத்து தெரிவித்தமைக்காகவே தான் இவ்வாறான அழைப்பை விடுப்பதாக அமைச்சர் மேலும்  தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் கோரிக்கைக்கு 4 தொலைக்காட்சி  நிறுவனங்கள் முன்வந்த போதும்மாத்தறை ஆனந்த சாகர  தேரா் ஹிரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு மட்டுமே தன்னால் வரமுடியும் .என அறிவித்திருந்தார்.

அமைச்சா் றிசாத் பதியுத்தீனும் மாத்தறை ஆனந்த சாகர தேரின் விருப்பத்தை ஏற்றுள்ளார் ஹிரு தொலைக்காட்சியில் சலக்குன நிகழ்ச்சியில் இவா்களது விவாதம் எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கள்கிழமை  இரவு 10 மணிக்கு இடம் பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top