கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்த போது
உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல்
கண்ணீர்விட்டு அழுத
சல்மான் கான்
2002-ம் ஆண்டு போதையில் காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில் சல்மான்
கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்த போது
உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் சல்மான்கான் கண்ணீர்விட்டு அழுததாக அறிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க இன்று மதியம் சுமார் 1.30 மணிக்கு
நீதிமன்றத்திற்கு சென்றிருந்த சல்மான்கான், பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்தார்.
நீதிபதி ஏ.ஆர்.ஜோஷி, ‘சல்மான் கானுக்கு எதிராக அரசு தரப்பிலும்,
மனுதாரர் தரப்பிலும் சமர்ப்பிக்கபட்ட ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று கூறினார். மும்பை செசன்சு நீதிமன்றம் விதித்த 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை
செய்கிறோம் என அறிவித்தவுடன் நீதிமன்ற அறையில் பார்வையாளர் பகுதியில் சுவரில் சாய்ந்துக் கொண்டு அமர்ந்திருந்த சல்மான்கான் பின்னர் ஒரு பாடலை முணுமுணுத்தப்படி நின்றார் எனவும் பாடலை பாடி தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயன்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் அது முடியாமல் போகவே அழத் தொடங்கினார். இதனைப் பார்த்த அவரின் பாதுகாவலர் ஷேரா,
சல்மானிடம் சென்று மக்கள் பார்க்காதவாறு சுவரை நோக்கி திரும்பிக்கொள்ளும்படி கூறினார்
என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தீர்ப்பால மிகவும் மகிழ்ச்சியடைந்த சல்மானின் தங்கைக்கு சிரிப்பைக்
கட்டுப்படுத்த முடியாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர் செய்தியாளர்களை நோக்கி
கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் எனவும் கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment