ஐ. தே.கட்சியின்
எம்.பியான முஜிபூர் ரஹ்மான் மீது
கூட்டு எதிரணியைச் சேர்ந்த உறுப்பினர்கள்
தாக்குதல்
ஐக்கிய
தேசியக்கட்சியின் எம்.பியான முஜிபூர் ரஹ்மான், நாடாளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது, கூட்டு எதிரணியைச் சேர்ந்த
உறுப்பினர்கள் சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்
இதனால், அவையில்
ஏற்பட்ட பதற்ற
நிலைமையையடுத்து அவை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக்
கட்சியின் கொழும்பு
மாவட்ட எம்.பியான முஜிபூர்
ரஹ்மான், உரையாற்றிக்கொண்டிருந்த
போது, ஐக்கிய
மக்கள் சுதந்திரக்
கூட்டமைப்பு எம்.பிக்கள் சிலர் தாக்க
முற்பட்டனர். இதனையடுத்தே அவையில் பதற்றமான நிலைமை
ஏற்பட்டது.
பிரபல
றக்பி வீரர்
வசீம் தாஜுதீன்
கொலை விவகாரத்தை
மையப்படுத்தி அவர் உரையாற்றியதையடுத்தே அவையில் பதற்றமான
நிலைமையொன்று ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் எதிரணியின் பக்க ஆசனத்தில் இருக்கின்ற
ஐக்கிய தேசியக்கட்சியின்
எம்.பியான
முஜிபூர் ரஹ்மான்,
உரையாற்றிக்கொண்டிருந்த போது, கூட்டு
எதிரணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவர் மீது
தாக்குதல் நடத்தியுள்ளனர்
இதனையடுத்தே அவையில் பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளது
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உரை நிகழ்த்தியதன் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் தனது உரையை ஆரம்பித்து நிகழ்த்திய போதே பதட்டம் ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது
றக்பீ வீரர் வசிம் தாஜுடீனின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இந்த சபையில் அமர்ந்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்ற சம்பவம் தொடர்பில் சபையில் உரை நிகழ்த்த கூடாது என எதிர்தரப்பினர் கூச்சலிட்டுள்ளனர்.
எனினும், இந்த சம்பவம் தொடர்பில் சபையில் கருத்து தெரிவித்த அதிகாரம் உள்ளதாக பிரதி அமைச்சர் சுஜிவ சேனசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அதனை பொருட்படுத்தாத எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு சபையில் அமளிதுமளியை ஏற்படுத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment