சம்மாந்துறையில் இன்று 31 ஆம் திகதி துக்கம்
விஷேட (துஆ) பிரார்த்தனையும்
செய்யப்பட்டது
கொழும்பு
– கண்டி பிரதான
வீதியிலுள்ள வறக்காபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மலதெனிய எனுமிடத்தில், நேற்று (30.12.2015) புதன்கிழமை
காலை 4.45 மணியளவில் இடம்பெற்ற கொடூர வாகண
விபத்தில் மரணமடைந்த
சம்மாந்துறையைச் சேர்ந்தவர்களின் இழப்பினால்
அக்குடும்பத்தினர் மாத்திரமன்றி சம்மாந்துறை மக்கள் உட்பட நாட்டு மக்கள் சோகத்தில்
ஆழ்ந்துள்ளனர்.
இவ்விபத்தில்
வபாத்தானவர்களுக்காக இன்று 31.12.2015 வியாழக்கிழமை சம்மாந்துறை முழுவதும் துக்க
தினம் அனுஸ்டிக்கப்பட்டது
சம்மாந்துறை
வாழ் மக்கள்
அனைவரும் தங்கள்
வர்த்தக நிலையங்கள் சில்லறைக் கடைகள், அரச, தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவணங்கள் என்பனவற்றை மூடி இன்று விபத்தில் வபாத்தானவர்களுக்காக
தனியாகவும் கூட்டாகவும்( துஆ ) பிரார்த்தனையில்
ஈடுபட்டனர்.
இன்று சம்மாந்துறையில் போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடைந்து வீதிகள்
அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது.
சம்மாந்துறை நம்பிக்கையாளர்கள் சபையினரின் ஏற்பாட்டில் சகல பள்ளிவாசல்களிலும்
தொழுகையின் பின்னர் விபத்தில் மரணித்தவர்களுக்காக விஷேட (துஆ) பிரார்த்தனையும்
செய்யப்பட்டது,
தகவல் - சம்மாந்துறை அன்சார்.
தகவல் - சம்மாந்துறை அன்சார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.