முஸ்லிம்களை வரவேற்கும்
பெரும் எண்ணிக்கையான அமெரிக்கர்கள்
ஊடக ஆய்வில் தகவல்
அமெரிக்க குடியரசுக்
கட்சி வேட்பாளர்
டிரம்ப்பின் முஸ்லிம் எதிர்ப்பு பேச்சை நிராகரிக்கும்
வகையில் சுமார்
57 சதவீத அமெரிக்கர்கள்
தங்களது நாட்டினுள்
முஸ்லிம் குடியேறிகளை
அனுமதிக்க விரும்புவதாக
கருத்துக்கணிப்பு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.
என்பிசி மற்றும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நடத்திய கருத்துக்கணிப்பின்
முடிவில் இவ்வாறு
குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களில்
25 சதவீதத்தினர் முஸ்லிம் குடியேறிகளை அனுமதிக்க தடை
விதிக்கலாம் என்றும் 18 சதவீதத்தினர் இதில் கருத்துக்
கூற விரும்பவில்லை
என்றும் தெரிவித்துள்ளனர்.
அதுபோல,
டிரம்ப்பின் குடியரசுக் கட்சியில் 42 சதவீதத்தினர் அவரது
கருத்துக்கு உடன்பட்டும் 36 சதவீதத்தினர்
நிராகரித்தும் 22 சதவீதத்தினர் கருத்து இல்லை என்று
தெரிவித்துள்ளனர்.
ஆளும்
ஜனநாயகக் கட்சியில்
75 சதவீதத்தினர் டோனால்ட் டிரம்ப்பின் பரிந்துரையை எதிர்ப்பதாகவும்
11 சதவீதத்தினர் ஏற்பதாகவும் 14 சதவீதத்தினர்
கருத்துக் கூற
விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதன்
முடிவில் 57 சதவீத அமெரிக்கர்கள் முஸ்லிம் குடியேறிகளை
வரவேற்கவே செய்வதாக
ஆய்வு முடிவு
கூறுகிறது.
அமெரிக்காவில்
முஸ்லிம் குடியேற்றத்துக்கு
முழுமையாக தடை
விதிக்க வேண்டும்
என்று குடியரசுக்
கட்சியின் மூத்த
தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்டு டிரம்ப்
அதிரடியாக கூறிவருகிறார்.
இதற்கு சர்வதேச
அளவில் கடும்
எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆனால்,
தீவிரவாத அச்சுறுத்தல்
அதிகம் இருக்கும்
இந்தக் காலகட்டத்தில்
ட்ரம்ப்பின் பேச்சு பரிசீலக்க வேண்டியது என்றும்
இதனால் ஜனாதிபதி தேர்தலையொட்டி அவர் மீது புதிய
நம்பகத்தன்மை ஏற்பட்டிருப்பதாகவும் சில கருத்து எழுந்துள்ளதும்
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment