வசிம் தாஜுதீனின் கொலை
பிரபல
றக்பி விளையாட்டு
வீரர் வசிம்
தாஜூதீன் கொலையுடன்
சம்பந்தப்பட்ட சீசிடிவி காட்சிகளின் முக்கிய பகுதிகள்
இன்று 14 ஆம் திகதி ஊடகங்களுக்கு கசிந்துள்ளது.
வசிம்
தாஜூதீன் 2012ம் ஆண்டு மே மாதம்
16ம் திகதி
இரவு கடத்திச்
செல்லப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, அவரது
காருக்குள் போட்டு , நாராஹேன்பிட்டி சாலிகா விளையாட்டு
மைதானத்தின் மதில் சுவர் அருகே காருக்கு
தீவைத்து, படுகொலை
செய்துள்ளதாக ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது
இந்த
சம்பவம் தொடர்பிலான
பாதுகாப்பு கெமராக்களில் பதிவான சகல காட்சிகளும்
குற்றப் புலனாய்வு
திணைக்களத்திடம் உள்ளன என அறிவிக்கப்படுகின்றது.
முக்கிய அரசியல் குடும்பத்தின் சாரதியான
ஒருவரே இந்த
கொலையை செய்துள்ளதாக
குறித்த பாதுகாப்பு
கெமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது.
இந்த
சாரதி, தாஜுதீனை ரி.56
ரக துப்பாக்கியால்
தாக்குவது பாதுகாப்பு
கெமராவில் தெளிவாக
பதிவாகியுள்ளது.
தாக்கப்பட்ட
தாஜுதீன் மார்பை பிடித்து
கொண்டு கீழே
விழுவது, அப்போது
அவர் அருகில்
இருந்து விலகிச்
செல்லும் சாரதியின் கையில்
இரத்தம் படிந்த
ரம்போ ரக
கத்தி இருப்பதையும்
தெளிவாக காணக்
கூடியதாக உள்ளதாக
தெரியவருகிறது.
இதற்கிடையே
குறித்த சீசிடிவி
காட்சிகளில் இருந்து தாஜுத்தீன் பயணித்த வாகனம்
பார்க் வீதியில்
வைத்து சாரதி தரப்பினரால் வழிமறிக்கப்படும்
காட்சி, அதன்
பின்னர் அவர்
தாக்கப்படும் காட்சி, பின்னர் தாஜுத்தீனை சாரதி
இருக்கைக்கு அருகில் உள்ள ஆசனத்தில் இழுத்துப்
போட்டு சாரதி குறித்த காரை ஓட்டிச் செல்லும்
காட்சி, பின்னர்
கார் சாலிகா
மைதான மதில்
சுவர் அருகில்
நிறுத்தப்படும் காட்சி என்பன தொடர்பான புகைப்படங்கள்
கிடைக்கப் பெற்றுள்ளது.
அத்துடன்
தாஜுதீன் வழிமறித்து
தாக்கப்பட்ட இடத்தில் இருந்து, உயிருடன் எரிக்கப்பட்ட
இடம் வரை
அவர் காரில்
கொண்டு வரப்பட்ட
போது இரண்டு
டிபெண்டர் வாகனங்கள்
குறித்த காருக்கு
பாதுகாப்பு வழங்கிச் சென்றுள்ளன.
பின்னர்
தாஜுதீனின் கார் சாலிகா மைதான மதில்
சுவர் அருகில்
நிறுத்தப்பட்ட பின்னர், முன்னால் இரும்புத் தகடு
பொருத்தப்பட்டிருந்த டிபெண்டர் ஒன்றினாலேயே
மதில் சுவர்
மீது மோதப்பட்டுள்ளது.
பின்னர் தாஜுதீனின்
காரும் இரண்டு
பக்கமாக டிபெண்டர்களால்
மோதி நொறுக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னரே
குறித்த காருக்குள்
அவர் உயிருடன்
தீக்கிரையாக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
மேலும்
இந்த கொலைக்கு
உதவியவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்
அவர்கள் அனைவரும் முக்கிய
அரசியல் குடுபத்தினருடன்
நெருக்கமாக இருக்கும் நபர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment