மஸ்ஜிதுல் அக்ஸா பேஷ் இமாமுக்கு

கொழும்பில் வரவேற்பு

முஸ்லிம்களின் முதலாவது கிப்லாவான பைதுல் முகத்தஸ் என்று அழைக்கப்படும் பலஸ்தீனின் பழைய ஜெரூஸலம் நகரிலுள்ள புனித மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலின் பேஷ் இமாமான அஷ்ஷேக் இமாம் அலி ஒமர் யாகூப் அல் அப்பாஸிகான வரவேற்பு நிகழ்வொன்று இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் நேற்றிரவு கொழும்பில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு, கொழும்பு – 07 இலுள்ள மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ்வின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் இடம்பெற்றது. இதன்போது புனித மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலின் பேஷ் இமாம் சிறப்புரையொன்றை நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் நாட்டு இராஜதந்திரிகள், அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top