ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்வின்
கல்முனை மாநகரம் உள்ளூராட்சியும் சிவில் நிருவாகமும்
நூல் வெளியீட்டு விழா
ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய கல்முனை மாநகரம் உள்ளூராட்சியும் சிவில் நிருவாகமும் எனும் ஆய்வு நூல் வெளியீட்டு விழா இன்று20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொழும்பு 02, 51,வொக்ஷோல் லேன், “தாருஸ்ஸலாம‘ எனும் இடத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்முனை மாநகர மேயர் நிசாம் காரியப்பர், புரவலர் ஹாசிம் உமர், கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் உற்பட மேலும் பல அரசியல் பிரமுகர்களும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.
நூலின் மதிப்புரையை சிரேஷ்ட ஒலிபரப்பாளரும் எழுத்தாளருமான அஸ்ரப் சிஹாப்தீனும் முன்னாள் உதவிப் பதிவாளர் மன்சூர் ஏ.காதிர் அவர்களும் நூல் அறிமுகத்தினை எழுத்தாளர் முஸ்தீன் மற்றும் தமிழ்மிரர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஏ.பி.மதன் ஆகியோர் நிகழ்த்தினர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.