நான் இலங்கையனாக இருப்பதற்கு பெருமைப்படுகின்றேன்
ஸ்டிக்கர்களை சில நாட்களுக்கு பயன்படுத்துங்கள்
பொதுபலசேனா குழுவினர்களும் இனவாதிகளும் சிங்க இரத்தம் என்ற தனியான ஸ்டிக்கர்களை நாடுபூராகவும் ஒட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் மூலம் சிங்கள மக்களிடத்தில் இலங்கை சிங்களவர்களுக்குரிய நாடு என்ற இனவாதம் பாய்ச்சி ஒரு கலவர முயற்சிக்கு தூண்டி வருவதாக கூறப்படுகின்றது.
சிங்கள சகோதர சகோதரிகள் கூட தங்களது முகநூலில் (சிங்கள லே) என்ற சிங்கத்தின் படத்தை முகப்பு படமாக இட்டுள்ளனர்.
இதனால் முகநூல் பாவிக்கும் முஸ்லிம் சகோதரர்கள் இவர்களின் இனவாத சிந்தனையை முறியடிக்க சிங்கத்தின் இரத்தம் என்ற படத்துடன் நான் இலங்கையனாக இருப்பதற்கு பெருமைப்படுகின்றேன் என்று கருத்துப்படும் ஸ்டிக்கர்களை முடியுமானானால் சில நாட்களுக்கு பயன்படுத்துங்கள்
அதனை தங்களது முகநூலில் இடுவதன் மூலம் இனவாதிகளின் சிந்தனைப்பரவலை முகநூலில் முறியடிக்கலாம் என நாம் எதிர்பார்க்கின்றோம். முடியுமானால் நீங்களும் இவ்வேலைத்திட்டத்தில் கைகோருங்கள்....!!!
இப்படங்களை தங்களுடன் நட்பாகவுள்ள சிங்கள சகோதரர்களுக்கும் Tag செய்துவிடுங்கள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.