கடந்த ஹஜ் கடமையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 2411 பேர் பலி

அமெரிக்காவை சேர்ந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய  தகவல்

சவூதி அரசு அதிகாரபூர்வமாக அறிவித்ததைவிட 3 மடங்கு அதிகம்


க்கா புனித ஹஜ் பயண நெரிசலில் சிக்கி 2,411 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இது சவூதி அரேபிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் தற்போது  தகவல்கள் வெளியாகியுள்ளது.  அமெரிக்காவை சேர்ந்த அசோசியேஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கீட்டில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வூதி அரேபியாவில் உள்ள க்காவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்கிற இஸ்லாமியர்கள், அங்கு மினாவில் உள்ள சைத்தானுக்கு  கல் வீசும் கடமையில் கலந்துகொள்வது வழக்கம்.
கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் திகதி ஹஜ் கடமையின்போது ,சைத்தானுக்கு கல் வீச்சு நடந்தபோது திடீரென கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சுமார் 796 பேர் உயிரிழந்துள்ளதாக சவூதி அரேபியா அரசின் அதிகாரப்பூர்வ வெளியீட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், க்கா புனித ஹஜ் பயண நெரிசலில் சிக்கி 2,411 பேர் உயிரிழந்துள்ளதாக அசோசியேஸ்ட் செய்தி நிறுவனம் தற்போது புதிய கணக்கீட்டை வெளியிட்டுள்ளது. இந்த கணக்கீடு அரசு வெளியிட்டுள்ள தொகையை விட 3 மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்படுகின்றது.  
இந்த விபத்தில் ஈரான் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டது. 464 ஈரானியர்கள் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தப்படியாக 305 நைஜீரிய மக்களும், 190 எகிப்தியர்களும் உயிரிழந்தனர். இந்தியா தரப்பில் 129 பேர் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top