சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில்
சர்வதேச தீவிரவாதி சமீர் காந்தர் பலி என தெரிவிப்பு

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில், அமெரிக்காவால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட லெபனான் தீவிரவாத தலைவர் எனத் தெரிவிக்கப்படும்  Samir Kantar, a prominent Hezbollah member, சமீர் காந்தர், பலியானார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிரியாவில் .எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக உலக நாடுகளின் படை தாக்குதல் நடத்திவருகிறது. டமாஸ்கஸில் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் லெபனான் தீவிரவாத தலைவர் சமீர் காந்தர் சிக்கி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்படுகின்றது. சமீர் கொல்லப்பட்டதை லெபனான் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு உறுதிசெய்துள்ளது. சமீர் காந்தர் கொல்லப்பட்டிருப்பதை சிரியா ஜனாதிபதியின் ஆதரவு படையும் உறுதிசெய்திருக்கிறது.
இருப்பினும் தீவிரவாதி சமீர் காந்தர் கொல்லப்பட்டதை வரவேற்ற இஸ்ரேல், மரணத்திற்கான தாக்குதலை நடத்தியது இஸ்ரேல்தான் என்பதை  உறுதிசெய்யவில்லை. சமீர் காந்தரின் உடல் டமாஸ்கஸ் நகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமீர் காந்தர் பயங்கரமான தீவிரவாதி என்று இஸ்ரேல் அறிவித்து இருந்தது. இஸ்ரேல் சிறையில் இருந்து கைதிகள் மாற்றத்தின் போது வெளியே வந்தபின்னர் காந்தர், லெபனான் ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கத்தின் தலைவராக திகழ்ந்து வந்தார். இந்தப்படை சிரியா சென்று, ஜனாதிபதி  பஷார் அல்ஆசாத் ஆதரவு படையினருடன் இணைந்து, கிளர்ச்சியாளர்களை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. இஸ்ரேல் வான்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள சமீர் காந்தர், கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top