ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர்

இலங்கைக்கு சர்வதேச ரீதியில் நற்பெயர்

-    அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு


இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த காலத்திலிருந்து  ஆட்சி மாற்றம் ஏற்படும் வரையில் சமாதானம் நிலைநாட்டப்படவில்லை என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்  நகர அபிவிருத்தி மற்றும், நீர் விநியோக வடிகாலமைப்பு அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று 30 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுளார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்,
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போதிலும், இலங்கையில் சமாதானம் நிலைநாட்டப்படவில்லை. சமாதானம் தோல்வியடைந்த ஒன்றாகவே காணப்பட்டது. தினந்தோறும் ஏதோ ஒரு வகையில் மதவாத பிரச்சினைகள், தாக்குதல்கள் என்பன இடம்பெற்றன. இவ்வாறான ஒரு நிலையில், ஆட்சி மாற்றத்தினைத் தொடர்ந்து இலங்கைக் சர்வதேச ரீதியில்  தற்போது நற்பெயர் கிடைத்துள்ளது.
இலங்கையில் சமத்துவம், சகோதரத்துவம், இனங்களுக்கு இடையில் புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கியமைக்காக சர்வதேச, வல்லரசு நாடுகள் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரை வாழத்துக்கின்றன.

இவ்வாறான ஒரு நிலையில், சர்வதேச அங்கீகாரத்துடன் இணக்கத் தீர்வு கொண்டு வருவதற்கும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் புதிய அரசாங்கம் முயற்சித்து வருகின்றது  என்று அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top