தடை செய்யப்பட்ட நிலையில்
ஆந்திர சட்டப் பேரவையில் நுழைய முயன்ற நடிகை ரோஜா கைது
பொலிஸ் வேனில் திடீரென மயங்கி விழுந்தார்
ஆந்திர
சட்டப்பேரவையின்போது அநாகரீகமாக நடந்து
கொண்டதாக எம்.எல்.ஏ நடிகை ரோஜா
சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நேற்று சனிக்கிழமை அவர் தடையை மீறி சட்டப்பேரவை
வளாகத்துக்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
ஆனால் அவர்
பொலிஸ்
வாகனத்தில் மயங்கியதால் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் என அறிவிக்கப்படுகின்றது. இதனால்
அப்பிரதேசங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆந்திர
மாநில சட்டப்பேரவையில்
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கந்துவட்டி(கால் மணி)
விவகாரம் குறித்து
காரசார விவாதம்
நடைபெற்றது. அப்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு
நாயுடு பற்றி
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், பேரவையில்
நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டதாகவும் ஒய்.எஸ்.ஆர்
காங்கிரஸ் கட்சி
எம்.எல்.ஏவும் பிரபல நடிகையுமான
ரோஜா ஓராண்டு
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க தடை விதிப்பதாக
சபாநாயகர் கே.சிவபிரசாத் ராவ்
அறிவித்திருந்தார்.
இந்த
பரபரப்பு சம்பவங்களுக்கு
பிறகு நேற்று
காலை எம்எல்ஏ
ரோஜா சட்டப்பேரவைக்குள்
நுழைய முயன்றார் எனக் கூறப்படுகின்றது.
அப்போது அங்கிருந்த
பொலிஸார் மற்றும் சட்டப்பேரவை பாதுகாவலர்கள் அவரை
தடுத்து நிறுத்தினர்.
இதனால் அவர்களுக்குள்
தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகத் தெரிவிக்கபடுகின்றது. .
அப்போது
பொலிஸார் வலுகட்டாயமாக ரோஜாவை வேனில் ஏற்றி
நாம்பல்லி காவல்நிலையத்திற்கு
அழைத்து சென்றனர்.
அப்போது அவருக்கு
ரத்தக்கொதிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதில்
அவருக்கு காயம்
ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஐதராபாத் நிம்ஸ்
மருத்துவமனையில் ரோஜா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர் தொடர்ந்து
2 நாட்கள் சிகிச்சை
பெற வேண்டும்
என டாக்டர்கள்
கூறியதால் அவர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment