டெல்லி விமான விபத்து
பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 10 பேர் பலி

டெல்லி விமான நிலையம் அருகே எல்லை பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான சூப்பர்கிங் ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 10 பேர் பலியாகினர்.
சம்பவம் குறித்து டெல்லி விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கூறும்போது, "இன்று காலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ராஞ்சிக்கு புறப்பட்ட விமானம் துவாரகாவில் உள்ள பத்போலா என்ற கிராமத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது.. எல்லை பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான அந்த விமானத்தில் பைலட் உட்பட 10 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்டச் சில நிமிடங்களிலேயே விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட பைலட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
விமானத்தை விமான நிலையத்துக்கே திருப்பிச் செலுத்துவதாகவும் அவசரமாக தரையிறங்க ஓடுதளத்தை தயார் படுத்துமாறும் கோரினார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது. அதற்கான ஆயத்தப் பணிகளை செய்தோம். ஆனால் சில வினாடிகளிலேயே விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், காலை 9.50 மணியளவில் விமான நிலையத்துக்கு அருகேயே விமானம் விழுந்து நொறுங்கியது. விமானத்திலிருந்த 10 பேர் பலியாகினர். சம்பவ இடத்துக்கு 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன" என்றனர்.
சம்பவ இடத்துக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விரைந்துள்ளார். விமானத்திலிருந்த 10 பேரும் பலியானதை விமான போக்குவரத்து துறை அமைச்சர் மகேஷ் சர்மா உறுதி செய்துள்ளார்.

விமான விபத்து நடந்த இடத்துக்கு, எல்லை பாதுகாப்பு படை .ஜி மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சம்பவ இடத்துக்கு பார்வையிட விரைந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்படுகின்றது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top