விதையாய் போன ஆசான்
மருதமுனை மர்ஹும் ஏ.எச்.எம்.மஜீத் அதிபர்
# மர்ஹும் ஏ.எச்.எம்..மஜீத்
அதிபர் அவர்கள்
1935.04.26ம் திகதி அப்துல் ஹமீது,
சரீபா உம்மா
தம்பதியினரின் ஒரே மகனாகப் பிறந்தார்.
# இவர்
எமது மனாரியன்'ஸ்-95ன்
பெண்கள் பிரிவு
அங்கத்தவரான எம்.எம்..ஜம்ஸித்(ஆசிரியை)யின் தந்தையாவார்.
# தனது
ஆரம்பக் கல்வி
தொடக்கம் SSC பரீட்சை வரை அல்மனாரில் (அப்போதய
அரசினர் ஆண்கள்
பாடசாலை)
தனது
ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்தார்.
1950, 1951களில் தரம் 9ம, 10ம்
தரங்களை ஹபுகஸ்தலாவையிலும்
கல்வி கற்றார்.
# 1952,1953 காலப்பகுதியில் தொழிச்
சங்கம் அமைத்து
தொழிலாளர் நலனுக்காக
போராடியவர்.
# 1954ல் SSC பரீட்சையில் சித்தியடைந்தார்.
(அப்போது
தோற்றியவர்களில் இரண்டு மாணவர்களே சித்தியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)
# 1956ல் ஆண்டு ஆசிரியர் கலாசாலை
பிரவேசப் பரீட்சைக்குத்
தோற்றி சித்தியடைந்தார்.
# 1957 –1958 ஆண்டுவரை அட்டாளைச்சேனை
ஆசிரியர் பயிற்சிக்
கலாசாலையில் பயிற்சிகளை பெற்றார்.
# 1959 ஜனவரி 5ல் கலாவெவ முஸ்லிம்
வித்தியாலயத்தில் உதவி ஆசிரியராக நியமனம் பெற்றார். (இக்காலத்தில்
கலாவெவ பிரதேசத்தின்
கல்வி வளர்ச்சிக்காக
பல கஷ்டங்களை
சந்தித்தார்.)
# 1960 டிசம்பர் 3ம் திகதி முகம்மது
இப்றாஹீம் மரைக்கார்
செய்யத் உம்மா
என்பவரை நிக்காஹ் செய்து கொண்டார்.
# 1963ல் மருதமுனை அரசினர் கலவன்
பாடசாலைக்கு (தற்போதைய அல்-மனார் மத்திய
கல்லூரி) இடம்மாற்றம்
செய்யப்பட்டார்.
# 1963ல் கல்விப்பணி மன்றம் அமைத்து அதன்
தலைவராக இருந்து
மருதமுனையின் எதிர்கால கல்வி மேம்பாட்டுக்காக தீவிரமாக
உழைத்தார்.
# 1965ல் ஆசிரிய ஆலோசகர் பரீட்சையில்
சித்தியடைந்தார்.
# 1965 - 1968 வரை மருதமுனை
ஹஸனிய்யா பலநோக்குக்
கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளராக பதவி வகித்தார்.
# 1966ல் சம்மாந்துறை விவசாயப் பண்ணையில்
விவசாயத்துறையில் பயிற்சி பெற்றார்.
# 1957 - 1970 வரை மருதமுனை
கரப்பந்தாட்ட அணியின் உப தலைவராக செயற்பட்டு
அம்பாரை மாவட்டத்தில்
இந்த அணியை பிரபல்லியமடையச் செய்தார்.
# 1968 - 1970 வரை ஹஸனிய்யா
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
# 1967 - 1970 காலப்பகுதியில் பலாலி
ஆசிரியர் பயிற்சியிக்
கலாசாலையில் வர்த்தக ஆசிரியராக பயிற்சி பெற்றார்.
# 1971ல் க.போ.த(உ/த) பரீட்சையில் சித்தியடைந்தார்.
# 1971ல் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில்
வர்த்தக ஆசிரியராக
கடமையேற்ற மர்ஹும் ஏ.எச்.எம்.மஜீத் அதிபர்
அவர்கள் அங்கு
வர்த்தக பிரிவு
புகழ் பெற்று
விளங்க அரும்
பாடுபட்டார்.
# 1972ல் GAQல் சித்தியடைந்தார்.
# 1973ல் முதல்தர அதிபராக கலாவெவ
முஸ்லீம் மஹா வித்தியாலயத்தில் நியமனம் பெற்று அங்கு கலை,
வர்த்தக பிரிவுகளை
ஆரம்பித்து சாதனை படைத்தார்.
(மருதமுனையின்
3வது முதல்தர
அதிபர்)
# 1973ல் கல்வி அமைச்சரான பதியுத்தீன்
மஹ்மூத் மருதமுனைக்கு
வருகை தந்து
அல்மனாரின் கல்வி அபிவிருத்தியை ஆரம்பித்து வைத்த
வேளை அந்த
வரவேற்புக்குழுவுக்கு செயலாளராக இருந்து
முனைப்புடன் செயற்பட்டார்.
# 1975ல் தோப்பூர் மகா வித்தியாலயத்துக்கு
இடம் மாற்றம்
கிடைத்தது. அப்போது அப்பாடசாலையில் கலை, வர்த்தக
பிரிவுகளை ஆரம்பித்து
அப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் அதிக பங்காற்றினார்.
# 1976.06.21ல் இருந்து
1992ல் கல்வி
நிர்வாக சேவைக்குப்
பதவி உயர்வு
பெறும் வரை
17வருட காலம்
கமு/அல்-மனார் மகா
வித்தியாலயத்தில் அதிபராக இருந்து சேவை செய்தார்.
(இக்காலம்
அல்-மனாரின்
பொற்காலமாக வர்ணிக்கப்பட்டது. பாடசாலை நிர்வாகத்திலும், கற்றல் செயற்பாடுகளிலும் பல மாற்றங்களை
மேற்கொண்டு சாதனை படைத்தார். இந்த 17 வருட
கால அடைவுகளை
இன்று பலருடைய
வாழ்க்கையில் கண்டு கொள்ள முடியுமாக இருக்கின்றது.
அல்ஹம்துலில்லாஹ்!!
# 1985 தொடக்கம் மருதமுனை சமாதான சபையின்
தீவிர அங்கத்தவராக
இருந்து இக்கிராமத்துக்கு
சேவை செய்தார்.
அத்தோடு
1988 தொடக்கம் அதன் தலைவராக இருந்து தமிழ்,
முஸ்லீம் மக்களிடையே
இன நல்லுறவு
ஏற்படுத்த பாடுபட்டார்.
# 1986ல் கல்முனை வடக்கு கொத்தணி
அதிபராக இருந்து
கிழக்கிலங்கையின் அதி சிறந்த கொத்தணி அதிபர்
விருதையும் பெற்றார்.
# 1990ல் கல்வி அமைச்சால் அதிபர்
திலகம் விருது
வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
# 1992ல் சமாதான நீதிபதியாக நியமனம்
பெற்று பல
சமரச பணிகளில்
ஈடுபட்டார்.
# 1992ல் கல்முனையின் உதவிக் கல்விப்
பணிப்பாளராக நியமனம் பெற்றார்.
# 1993ல் அக்கரைப்பற்றுக் கோட்டக் கல்விப்
பணிப்பாளராக நியமனம் பெற்றார்.
# 1996 ஆண்டு முதல் மரணிக்கும் வரை
மஸ்ஜிதுல் கபீர்
பள்ளிவாசலின் நிர்வாக உருப்பினராகவும், அம்பரை மாவட்ட
அனைத்துப் பள்ளிவாசல்களின்
செயளாலராகவும் இருந்து ஆன்மீக பங்களிப்புக்களை செய்தார்.
# 1997 முதல் மரணிக்கும் வரை அரசாங்க
ஊழியர்களின் ஒழுக்காற்று விசாரனை அதிகாரியாக இருந்து
அரச ஊழியர்களின்
ஒழுக்கத்தை மேம்படுத்துவதில் அதிக அக்கரை காட்டினார்.
# 2007ல் காதி நீதிபதியாக நியமனம்
பெற்று பல
குடுப்பப் பிரச்சினைகளுக்கு
நல்ல, ஆரோக்கியமான
தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்தார்.
மர்ஹும் ஏ.எச்.எம்..மஜீத் அவர்களின் அல்-மனாரில் அதிபர் சேவை
ஒரு சுருக்கப் பார்வை..
------------------------------------------
- 1976.06.21ல் கமு/அல்-மனார் மஹா வித்தியாலயத்தில்
அதிபர் பதவியைப் பொறுப்பேற்றார்.
- இப்பாடசாலையில் இரவு நேர,
மாலை நேர
வகுப்புக்கள் திட்டமிடப்பட்டு ஒழுங்காக நடத்தப்பட்டு 1976ஆம் ஆண்டு O/L, NCGE பரீட்சைகளில் வரலாறு
காணாத பெறுபேற்றைப்
பெற்றுக் கொள்ள
உதவியமை.
- 1977ல் கலை, வர்த்தக பிரிவுகளும்,
1979ல் விஞ்ஞான
பிரிவும் ஆரம்பிக்கப்பட்டன.
- கல்முனை,
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலிருந்து தொண்டர்
ஆசிரியர்கள் கொண்டு வரப்பட்டு பொறியியல் பீடம்,
மருத்துவ பீடம்
உற்பட பல
துறைகளுக்குமான பல்கலைக்கழக பிரவேசத்தை அதிகரித்தமை.
- அல்-மனாருடைய நிலப்
பரப்பையும், பௌதீக வளத்தையும் அதிகரிப்பதற்காக அரும்பாடுபட்டார்.
- 1978ல் ஏற்பட்ட சூறாவளியால் அல்-மனார் மிக
மோசமாக பாதிக்கப்பட்டது.
என்றாலும் அந்தப்
பாதிப்புக்களிலிருந்து அல்-மனாரை
பல கஷ்டங்களுக்கும்,
தியாகங்களுக்கும் மத்தியில் பல அபிவிருத்திப் பணிகளை
கொண்டு மீட்டெடுத்தார்.
- 2003ல் மர்ஹும்ஏ.எச்.எம்
.மஜீத் அதிபர் அவர்களின் சேவையைப் பாராட்டி
மருதமுனை மக்களால்
சேவை நலன்
பாராட்டு ஒன்று
நடாத்தப்பட்டு அதில் "இமயம்"
என்ற சிறப்பு
மலரும் வெளியிடப்பட்டன.
- அதிபராகவும்,
ஓய்வு பெற்ற
பின்பும் தினமும்
சுபஹ் தொழுகைக்கு
முன்பும், பின்னரும்
அல்-மனாரை
சுற்றிப் பார்வையிடுவதை
வழக்கமாகக் கொண்ட ஒரவராகவே மரணிக்கும் வரை
இருந்தார்.
- தமிழ்
மொழி தின
விழா, ஆங்கிலதின
விழா, விளையாட்டுப்
போட்டி, முதலுதவி,
சாரணியம் மற்றும்
சர்வதேச தினங்களில்
பல்வேறு நிகழ்ச்சிகளையும்
முதன் முதலாகவும்
குறைந்த வளங்களுடன்
அமைச்சு மட்டங்களே
பாராட்டும் அளவிற்கு நடாத்தி அதன் மூலம்
அல்மனாரை கொத்தணிப்
பாடசாலைகளின் தலைமையாக்கினார்.
- 2012.01.27ஆம் திகதி
வெள்ளிக்கிழமை தான் நேசித்த அல்-மனார்
மத்திய கல்லூரியின்
கல்வி அபிவிருத்தி
தொடர்பான கலந்துரையாடலில்
பங்குபற்ற சென்ற
வேளையில் அவரது
மூத்த மகன்
"வாப்பா உங்களுக்கு சுகம் காணாமல் கூட்டத்துக்கு
போக வேண்டாம்
என்ற போது,,,,,
நான்
உன்னைவிட, உனது
உம்மாவை விட,
எனது சகோதர்களை
விட அதிகமாக
நேசித்தது இந்தப்
பாடசாலையே என்று
கூறிவிட்டு அக்கூட்டத்துக்கு சென்றார்கள்"
இதுதான்
அவரது பிள்ளைகளோடு
கடைசியாக பேசிய
வார்த்தையாகும்,,,
அவ்வாறே
திடீரென பாடசாலையில்
வைத்து ஏற்பட்ட
சுகயீனம் காரணமாக
அன்றிரவே 10.50 மணியளவில் அவரது இன்னுயிர் அவரைவிட்டும்
பிரிந்தது.
அதனால்
அவரது ஜனாஸாத் தொழுகை
பாடசாலை மைதானத்திலேயே
நடாத்தப்பட்டு நல்லடக்கத்துக்காக கொண்டு செல்லப்பட்டது.
மர்ஹும்ஏ.எச்.எம்.மஜீத் அதிபர் அவர்களின்
இலக்கிய பங்களிப்புகள்,,
------------------------------------------
# பரிசு பெற்ற கதைகள்.
- கறையான்,
பெரியப்பா, விதானையார், வெகுளி, அட்டைகள்.
# பிற கதைகள்.
- பெஷன்
கேள்(fashion girl), சேர்க்கை, உணர்ச்சித்
தணிப்பு, நிம்மதியைத்
தேடி, ஒற்றை
நாணயம், அவள்
போன இடம்,
நரக தேவதை,
ஒர் எதிரியின்
விலை, ஒவ்வாமை,
மருந்து, நண்பர்கள்,
பிராத்தனைக் கதை.
# உருவகக் கதைகள்.
- திறமை,
கர்வம், எதிர்ப்பு(தினகரன்)
-பகுத்தறிவு,
தியாகிகள், சக்தி-சேவை, தோட்டம்(வீரகேசரி)
- அகில
இலங்கை கம்பன்
விழாவில் 2004ம் ஆண்டுக்கான விமர்சனப் போட்டியில்
1ம் இடம்
பெற்றார்.
- 2005.08.21ல் "எனது
கிராமத்தை தேடுகிறேன்"
என்ற மருதமுனையின்
வரலாறு, கலாசாரம்,
பண்பாட்டு பற்றிய
ஒரு நூல்
இவரால் வெளியிடப்பட்டது.
மர்ஹும் ஏ.எச்.எம்..மஜீத்
அதிபர் அவர்களின்
கல்விசார் மற்றும்
சமூக சேவைகளை
"ஸதகத்துல் ஜாரியாவாக" ஏற்றுக் கொண்டு, அன்னாரின் கப்ரை விசாலமாக்கி,
மறுமையில் "ஜன்னத்துல் பிர்தௌஸ்" எனும் உயர்ந்த
சுவனத்தைக் கொடுப்பானாக!!!
ஆமீன்!!!
0 comments:
Post a Comment