சோதனைக் குழாய் மூலம் பிறந்த
உலகின் முதல் நாய்க் குட்டிகள்!

உலகிலேயே முதல் முறையாக சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்கப்பட்ட 7 நாய்க் குட்டிகள் அமெரிக்காவில் பிறந்துள்ளன.
 அமெரிக்க விஞ்ஞானிகள் இந்த சாதனையால், அரிய வகை நாய்களைப் பாதுகாப்பதற்கும், மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் புதிய வழி கிடைத்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "பப்ளிக் லைப்ரரி ஆஃப் சயின்ஸ் ஒன்' அறிவியல் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக கால்நடை மருத்துவத் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் முயற்சியில், சோதனைக் குழாயில் கருத்தரிப்பு செய்யப்பட்ட 7 வெவ்வேறு இனம் மற்றும் கலப்பின நாய்க்குட்டிகள் கடந்த ஜூலை மாதம் பிறந்தன.
 நீண்டகாலமாவே, சோதனைக் குழாய் கருத்தரிப்பு முறையில் மனிதர்கள் குழந்தை பெற்று வந்தாலும், அதே முறையில் நாய்களை கருத்தரிக்கச் செய்யும் முயற்சி இதுவரை வெற்றி பெறவில்லை. பெண் நாய்களின் கருத்தரிக்கும் பருவம் மிகவும் மாறுபட்டது என்பதால் அவற்றின் சினை முட்டையை தனியாக எடுத்து, அதனைக் கருவுறச் செய்ய முடியாமல் இருந்து வந்தது.
 தற்போது, புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சோதனைக் குழாய் மூலம் நாய்க்குட்டிகளையும் பிறக்கச் செய்திருப்பதே அமெரிக்க விஞ்ஞானிகளின் சாதனையென அந்த  அறிவியல் இதழில் கூறப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top