அம்பாறை மாவட்ட
ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20வது ஆண்டு விழா
திட்டமிட்டபடி 25ஆம் திகதி இடம் பெறும்
- பொருளாளர் யு.முஹம்மட் இஸ்ஹாக்
அம்பாறை
மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20வது ஆண்டு விழா தொடர்பாக இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி குறித்து சம்மேளனத்தின் பொருளாளரான யு.முஹம்மட் இஸ்ஹாக்
வெளியிட்டுள்ள
விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
கடந்த
மாதம்
அட்டாளைச்சேனை பிரதேச சபை மண்டபதி
நடை பெற்ற
மாதாந்த பொதுக்
கூட்டத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூசணம் மீரா
இஸ்ஸதீன்
அங்கத்தவர்கள் மத்தியில் உரையாற்றும்
போது எமது
சம்மேளனத்தின் 20 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் முகமாக இதுவரை
சம்மேளனத்தில் கௌரவிக்கப் படாத ஊடகவியலார்களை கௌரவிக்க
வேண்டும் இதற்காக சம்மேளனத்தின் அனுமதியை
கோரினார். கூட்டத்தில்
கலந்து கொண்ட
32க்கும் மேற்பட்டவர்கள் அதற்கான
முழு அதிகாரத்தையும்
தலைவருக்கு வழங்கி இருந்தனர் . அதன் அடிப்படையில் தலைவர்
மீரா இஸ்ஸதீன்
அந்த நடவடிக்கைகளில் இறங்கி செயல் பட்டு வருகின்றார்
. இதற்க்கு அன்று சமுகமளித்த எந்தவொரு ஊடகவியலாளரும் எதிர்ப்பை
காட்டவில்லை. சங்கத்தின் அங்கத்தவர்கள் 40 பேர்
மட்டுமே தற்போது
செயற்பாட்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்மேளனத்தால் நடாத்தப்
பட்ட அனைத்து விழாக்கள்
வைபவங்களுக்கும் கணக்குகள் சரியாக
பதிவு செய்யப்
பட்டுள்ளன . 2015 ஆம் ஆண்டுக்கான பொருளாளர் நான்
என்ற அடிப்படையில்
கடந்த காலங்களில்
தவறுகள் நடந்திருந்தால் ஏன் அந்த தவறை
பொருளாளர் சுட்டிக்
காட்டவில்லை கடந்த காலங்களில்
பலர் பொருளாளராக இருந்து கடமை
செய்திருக்கின்றனர் அவர்கள் சரியான
கணக்குகள் பதிவிட்டுள்ளதை
பதிவேடுகளில் அவதானிக்க முடிகின்றது.
20வது
ஆண்டு விழாவை
கொண்டாவது தொடர்பான சம்மேளனத்தின்
கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று 20 ஆம் திகதி காலை
அட்டாளைச்சேனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்
பெற்றது. இக்கூட்டதுக்கான
அழைப்பு
சம்மேளன செயலாளர் ரஹுமதுல்லாவினால் அனைவருக்கும் விடுக்கப்
பட்டது. நேற்றய கூட்டத்தில் 36 பேர் கலந்து
கொண்டனர்.
விழா
தொடர்பான விளக்கத்தினை சம்மேளன
தலைவர் மீரா
இஸ்ஸதீன்
அனைவருக்கும் தெளிவு படுத்தி யார் யார் இதற்காக
உதவிகள் செய்யவுள்ளனர்
யார் யார்
கௌரவிக்கப் படவுள்ளனர் என்பதை வெளிப்படையாக அனைவர்
மத்தியிலும் எடுத்துக் கூறி கருத்து
வெளியிட்டார் . கலந்து கொண்ட 36 பேரில் ஒருவரேனும் மறுப்போ
அல்லது எதிர்ப்போ
கூறவில்லை தலைவருக்கு
அனைத்து
உதவிகளும் ஒத்துழைப்புகளும் வழங்க இணக்கம் தெரிவித்தனர்
.
குறித்த
செய்தியில் தெரிவிக்கப் பட்டது போன்று 25 பேர்
புறக்கணிக்கப் பட்டிருந்தால் நேற்று நடை பெற்ற கூட்டத்தில்
15 பேர் மாத்திரமே
கலந்து கொண்டிருக்க
வேண்டும். இது உண்மையை மறைக்கும்
ஒரு செய்தியாகும்
.
நான்
பொருளாளர் என்ற
வகையில் இவ்விழா
தொடர்பில் இவர்களால்
குறிப்பிட்ட அரசியல் பிரமுகர்களால் ஒரு சதமேனும்
சம்மேளனத்துக்கு பணமாக வழங்கவில்லை
என்பது உண்மையாகும்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் நினைவு
சின்னம்
தயாரித்து தருவதற்கான பொறுப்பை ஏற்று
காத்தான்குடி அல் -அரபா குய்க் டிஜிடல் நிறுவனத்தின்
பெயருக்கு 1இலட்சத்து 20ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கியிருந்தார் அந்த காசோலை நேற்று நடை
பெற்ற
கூட்டத்தில் அனைவருக்கும் காண்பித்து தலைவரினால்
என்னிடம் ஒப்படைக்கப்
பட்டது. இதில்
எந்த மறைவுக்கும்
இடமில்லை . பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகவியலாளர்களுக்கான
100 ரீ சேட் வழங்குவதற்கும்
, இராப்போசன பொறுப்பை பிரதி அமைச்சர் பைசால்
காசீம்
ஏற்றுக் கொண்டுள்ளதுடன் , தேநீர் உபசரிப்பை கிழக்கு
மாகாண
சுகாதார அமைச்சர் நசீரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்
. அத்துடன் நானாவித
செலவுக்கு பாராளுமன்ற
உறுப்பினர் மன்சூர் 50ஆயிரம் ரூபாவும் , மாகாண
சபை உறுப்பினர்
ஆரிப் சம்சுதீன்
15ஆயிரம் ரூபாவும்
தருவதாக கூறியுள்ளனர்
. அனால்
அமைச்சர் ரவூப் ஹக்கீம்
உடைய காசோலையை
தவிர
வேறு ஒரு சதமேனும் எம்மிடம் கிடைக்காத
நிலையில் இந்த
அப்துல்லா என்பவரால்
கூறப் பட்டுள்ள 10 இலட்சம் என்ற தொகையை மூக்கு சாஸ்திர
கணக்கில் கூறியுள்ளார்
. இதனை தவிர இவரால்
குறிப்பிடப் பட்ட யாரேனும்
இவ்விழாவுக்கு பணம் வழங்கியிருந்தால்
அதனை இந்த
அப்துல்லா வெளிப்படுத்த
வேண்டும் இல்லையேல் மிகுதியை
அவரேனும் தந்து
எமக்கு உதவ
வேண்டும் .
அப்துல்லா என்பவர் அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஊடகவியலாளரா ? அல்லது எமது சம்மேளனத்தின் ஒரு உறுப்பினரா ? ! பகிரங்க எதிர்ப்பைக் காட்டும் ஊடகவியலார்கள் யார்
என்பதை இந்த
அப்துல்லா வெளிப்படுத்த
வேண்டும் . திட்டமிட்டபடி இந்த விழா எதிர் வரும்
25ஆம் திகதி நிந்தவூர்
பிரதேச சபை
மண்டபத்தில் சம்மேளன
தலைவர் மீரா
இஸ்ஸதீன் தலைமையில்
இடம் பெறும் இதில் பிரதம அதிதியாக அமைச்சர்
ரவூப் ஹக்கீம் கலந்து
கொள்வார் அத்துடன்
பாராளுமன்ற உறுப்பினர்கள் ,மாகாண சபை உறுப்பினர்கள் என
பலரும் கலந்து
கொள்வார்கள் . இன்ஸா அல்லாஹ் .
0 comments:
Post a Comment