சவூதி அரேபியா தேர்தலில்
முதல் முறையாக பெண்கள்
வாக்களிப்பு
மன்னர் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் சவூதி அரேபியாவில் முதல்முறையாக பெண்கள் இன்று தேர்தலில் வாக்களித்துள்ளனர். இதுவரை பெண்களுக்கு ஓட்டு உரிமை அந்நாட்டில் கிடையாது. பெண்கள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. பெண்கள் வாகனங்கள் ஓட்டவும் அனுமதி இல்லை.
இந்த நிலையில், சவூதி அரேபியாவில் உள்ள 2 ஆயிரத்து 100 உள்ளூராட்சி சபைகளின் இடங்களுக்கு இன்று தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 1,050 இடங்களில் மன்னர் ஒப்புதலுடன் நியமனங்கள் செய்யப்படும்.
ஆண்களைப் பொறுத்தமட்டில் பதின்மூன்றரை லட்சம் பேர் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். பெண்களைப் பொறுத்தமட்டில் 1 லட்சத்து 30 ஆயிரம் 637 பேர் தான் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர்.காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், தலைநகர் ரியாத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் சவூதி கல்வி மற்றும் பெண்கள் உரிமை பிரசாரகர் ஹாட்டூன் அல் பாஸி முதல் ஓட்டை பதிவு செய்தார் என அறிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் மன்னர் அப்துல்லா மரணம் அடைவதற்கு முன்பாக சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். இதில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதும் அடங்கியிருந்தது.
0 comments:
Post a Comment