ஆட்டம் இழக்காமல் 1009
ஓட்டங்கள்!
மும்பை பாடசாலை மாணவனின் உலக சாதனை!
ஒரே
இன்னிங்ஸில் 1000 ஓட்டங்கள் குவித்த முதல்
கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை, மும்பையைச்
சேர்ந்த 15 வயது பிரனவ் தனவேத் எனும் 10 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் பாடசாலை மாணவன் பெற்றுள்ளார்
மும்பை
கிரிக்கெட் சங்கம் சார்பில் பாடசாலைகளுக்கிடையேயான
ஹெச்.டி.
பண்டாரி கோப்பை
உள்ளூர் கிரிக்கெட்
போட்டி நடைபெற்று
வருகிறது. இதன்
ஒரு ஆட்டத்தில்,
கே.சி.
காந்தி மேல்நிலைப்
பாடசாலையும்
ஆர்யா குருகுல்
பாடசாலையும் மோதின.
இதில்
முதலில் ஆடிய
கே.சி.
காந்தி பாடசாலை
அணி ஓட்டங்களைக் குவித்தது. பேட்ஸ்மேன்
பிரனவ், பவுலர்களைப்
பதம் பார்த்தார்.
தொடர்ந்து ஆடிய
அவர் இன்று
நம்பமுடியாத விதத்தில் ஆயிரம் ஓட்டங்களைக்
கடந்தார். இதுவரை
கிரிக்கெட்டில் எந்த ஒரு வீரரும் ஒரே
இன்னிங்ஸில் 1000 ஓட்டங்களை எடுத்தது கிடையாது.
3 விக்கெட்
இழப்புக்கு 1465 ஓட்டங்கள் எடுத்த நிலையில்
டிக்ளேர் செய்தது
கே.சி.
காந்தி அணி.
பிரனவ் கடைசி
வரை ஆட்டம் இழக்காமல் 323 பந்துகளில்
1009 ஓட்டங்கள்
குவித்தார். இதில் அவர் 129 பவுண்டர்களும் 59 சிக்ஸர்களும் அடித்தார்.
பிரனவ்,
629 ஓட்டங்கள்
எடுக்கும்போதே அது உலக சாதனையாக ஆனது.
கிரிக்கெட்டில் இதுவரை எந்த ஒரு பிரிவிலும்
யாரும் இவ்வளவு
ஓட்டங்கள்
எடுத்தது கிடையாது.
1899-ல் காலின்ஸ்,
628 ஓட்டங்கள்
எடுத்ததே உலக
சாதனையாக இருந்தது.
117 வருட சாதனையை
முறியடித்துள்ளார் பிரனவ்.
10-ம்
வகுப்பு படிக்கும்
பிரனவ்-வின்
தந்தை, ஆட்டோ
ஓட்டுநர். பிரனவ்
ஆயிரம் ஓட்டங்களை இன்று கடந்தபோது
அவர் அதை
நேரில் கண்டு
மகிழ்ந்து போனார்.
பிரனவ்-வின் கல்வி
மற்றும் கிரிக்கெட்
பயிற்சிக்கான மொத்தச் செலவையும் மஹராஷ்டிர அரசு
ஏற்றுக்கொள்வதாக கல்வித்துறை அமைச்சர் வினோத் தாவ்தே
அறிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment