லக்சல நிறுவன தலைமையகத்துக்கு விஜயம் செய்த
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபின் பாரியார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபின் பாரியார் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கட்டுப்பாட்டிலுள்ள லக்சல தலைமையகத்துக்கு சென்றுள்ளார்.
இதன்போது லக்ச நிறுவன தலைவரும் முன்னாள் தென் கிழக்கு பல்கலைகழக உபவேந்தருமான எஸ். எம். முஹம்மத் இஸ்மாயில் திருமதி நவாஸ் ஷெரிபை வரவேற்று நிறுவனத்தின் செயல்பாடுகள் அதன் உற்பத்தி பொருட்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

இலங்கையின் மிகப் பெறுமதி வாய்ந்ததும் புராதன உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும்  நிறுவனமான லக்சல நிறுவனத்தின் பல்வகை உற்பத்தி பொருட்களையும் பார்வையிட்டதுடன் கலாநிதி இஸ்மாயிலினால் நினைவுச் சின்னமும் நவாஸ் ஷெரிபின் பாரியாருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top