2 கோடியே 71 இலட்சத்து
தங்கம் கடத்த முற்பட்ட
சட்டவிரோதமான முறையில் மலேசியாவிலிருந்து தங்கத்தை கொண்டு வந்த நபர் ஒருவரும், அந்த தங்கத்தை வெளியில் கொண்டுச் செல்ல உதவிய அதிகாரியும் இன்று அதிகாலை கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 12.10 மணியளவில் மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்த மலேசியன் விமானச் சேவைக்கு சொந்தமான ஆர் 179 என்ற விமானத்தில் வந்த, 31 வயதுடைய காத்தான்குடியைச் சேர்ந்த நபர் ஒருர் சுமார் 2 கோடியே 71 இலட்சத்து 53 ஆயிரம் பெறுமதிமிக்க தங்கத்தை கொண்டு வந்துள்ளார். 392 மாலைகளும், 18 தங்ககட்டிகளையுமே இவ்வாறு கொண்டு வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தங்கத்தை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடமை புரியும் புத்தளத்தைச் சேர்ந்த 53 வயதுடைய அதிகாரி ஒருவர், விமான நிலையத்திலிருந்து வெளியில் கொண்டுச் செல்ல உதவி செய்துள்ளார். இதனை அவதானித்த சுங்க அதிகாரிகள் அந்த அதிகாரியையும் கைது செய்துள்ளனர். குறித்த இரு நபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment