2015 ஆம் ஆண்டின் உலகில்
சிறந்த 10 கட்டிடங்கள்
கடந்த 2015 ஆண்டு உலகம் முழுவதும் ரியல் எஸ்டேட் துறைக்கு ஓரளவு உற்சாகமான ஆண்டாக இருந்தது. 2014-ம் ஆண்டின் தேக்கத்திலிருந்து மீண்டு வர இந்த ஆண்டு உதவியது. உலகம் முழுவதும் முக்கியமான கட்டிடத் திட்டங்கள் உருவாயின. உலகின் மிக உயரமான வீட்டுக் குடியிருப்புத் திட்டமான 432 பார்க் அவென்யூ கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
இது மட்டுமல்லாது சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டிடங்கள் கடந்த ஆண்டுதான் அதிகமாகக் கட்டப்பட்டன. கனடாவில் இருந்து வெளிவரும் அஸ்சூயர் என்னும் கட்டுமானத் துறை சார்ந்த பத்திரிகை உலக அளவில் சிறந்த 10 கட்டிடங்களைப் பட்டியலிட்டுள்ளது.
விளையாட்டு மைதானங்கள், வணிக வளாகங்கள், வீட்டுக் குடியிருப்புகள், அலுவலங்கள், சுகாதார மையங்கள் எனப் பல்வேறு வகையான கட்டிடங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
கட்டுமான நேர்த்தி, பயன்பாடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment