சவூதி அரேபியாவில் இன்று ஒரேநாளில்
47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்


சவூதி அரேபியாவில் இன்று ஒரே நாளில்47 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாக அந்நாட்டின் அரச தொலைக்கட்சி மற்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சவூதி அரேபியா நாட்டில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின்படி, மத துவேஷம், கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை ஆகிய கொடும் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
சவூதி அரேபியாவின் பிரபல ஷியா முஸ்லிம் இனத்தவர்களின் தலைவரான ஷேக் நிம்ர் அல்-நிம்ரிட்ஸ் மற்றும் 2003-2006-ம் ஆண்டுகளுக்கு இடையில் சவூதியில் தீவிரவாத தாக்குதல்களை நடத்திய அல் கொய்தா தீவிரவாதிகள் 46 பேருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவூதி வரலாற்றிலேயே அதிகபட்சமாக கடந்த 1995-ம் ஆண்டு 192 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த (2015) ஆண்டில் மட்டும் 157 பேருக்கு இதைப்போல் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரபல ஷியா முஸ்லிம் இனத்தவர்களின் தலைவரான ஷேக் நிம்ர் அல்-நிம்ரிட்ஸ்-க்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் சவூதி அரசு தேவையற்ற எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். அதற்கு பதிலாக மிகப்பெரிய விலையை தர வேண்டியதாகிவிடும் என ஷியா ஆதரவு நாடான ஈரான் முன்னர் எச்சரித்திருந்தது.
அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத சவூதி அரசு இன்று ஷேக் நிம்ர் அல்-நிம்ரிட்ஸ்-க்கும் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Saudi Arabia says 47 executed on terror charges

 Saudi Arabia executed 47 people on Saturday for terrorism, mostly suspected Al-Qaeda members, Interior Ministry said in a statement broadcast on state television.
State television showed footage of the aftermath of Al-Qaeda attacks in the last decade, media reported.
Saudi Grand Mufti Sheikh Abdulaziz Al Al-Sheikh appeared on television soon after to describe the executions as just, Reuters reported.
Al Arabiya said 45 of those executed were of Saudi nationality, alongside one Chadian and one Egyptian, according to a list of names and nationalities published by the Saudi Press Agency.

The 47 men were based across 12 regions in the kingdom, the interior ministry statement added.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top