முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின்
வீடு தாக்கப்பட்ட வழக்கு
2016.03.16 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
முன்னாள் வர்த்தக,வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின்
கல்முனையிலுள்ள இல்லத்தின்மீது கடந்த வருடம் (2015.01.05) ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல்
காலத்தில் கல் வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு ஒரு வருடத்திற்குப்
பின்னர் கல்முனை நீதிமன்றத்தில் நேற்று 2016.01.19 ஆம் திகதி இடம்பெற்றது.
இவ்வழக்கு விசாரணைக்கு முன்னாள் அமைச்சர்
ஏ.ஆர்.மன்சூர் அவர்களுக்கும் நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்ததை அடுத்து அவரும்
நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்தார்.
நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள
சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை வாசித்துக்காட்டப்பட்டது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன் இடம்பெற்ற இந்த அநியாய
சம்பவத்திற்கு நியாயமான நீதி கேட்டும்
தனது தந்தைக்கு ஆதரவாகவும் அவுஸ்திரேலியா நாட்டில் வாழும் முன்னாள் அமைச்சர் மன்சூர்
அவர்களின் மகள் சட்டத்தரணி மர்யம் நளிமுதீன் அவர்களும் நீதிமன்றத்திற்கு வருகை
தந்திருந்தார்.
இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் 2016.03.16 ஆம்
திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் வீடு தாக்கப்பட்டது
குறித்து இதனோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதி தேவன் என்ன தண்டனை வழங்கப் போகின்றான்
என அன்றிலிருந்து மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..இந்த நல்லாட்சியிலும்
இதற்கு தக்க தண்டனை வழங்கப்படும் என மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறர்கள்.
இப்படியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு
வீடுகளுக்கு கல் வீசி தாக்குதல் நடாத்துவது போன்ற அநியாயமானதும் அக்கிரமுமான செயல்பாடுகளுக்கும்
இது போன்று செயல்பட எத்தனிக்கும் ஏனையவர்களுக்கும் ஒரு படிப்பினையும்
எச்சரிக்கையும் தரக்கூடிய தண்டணைகளை கனம் கோட்டாரால் வழங்கப்படல் வேண்டும் என்பதே
மக்கள் ஆதங்கமும் விருப்பமுமாகும்.
இச்சம்பவம் தொடர்பாக அன்று பதிவேற்றப்பட்ட செய்தியும்
படங்களும்.....
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர் மன்சூரின்
கல்முனை வீட்டின் மீது
தாக்குதல் (படங்கள்)
முன்னாள்
வர்த்தக,வாணிபத்துறை
அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர்
அவர்களின் கல்முனையிலுள்ள
இல்லத்தின்மீது இன்று (2015.01.05) அதிகாலை
கல் வீச்சுத்
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்
அவரது புதல்வரான
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர்
ரவூப் ஹக்கீம்
அவர்களின் இணைப்புச்
செயலாளரான றஹ்மத்
மன்சூருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டிருக்கிறது.
இச்சம்பவங்கள்
தொடர்பாக றஹ்மத்
மன்சூர் தகவல்
தருகையில்,
நான்
தற்பொழுது ஜனாதிபதி
தேர்தல் பணிகளில்
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர்
ரவூப் ஹக்கீம்
சேர் அவர்களுடன்
திருக்கோணமலையில் இருந்து கொண்டிருக்கின்றேன்.
இன்று அதிகாலை
3.30 மணியளவில் கல்முனயிலுள்ள எங்கள் இரண்டு வீடுகளின்
மீதும் ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் கல்முனை தேர்தல் தொகுதி
அமைப்பாளர் ஏ.எம்.றியாஸும் அவருடைய
குழுக்களும் கல் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அச்சந்தர்ப்பத்தில்
கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த எனது தந்தையான
முன்னாள் அமைச்சர்
ஏ.ஆர்.
மன்சூர் அவர்களும்
எனது தாயான
ஸொஹறா மன்சூரும்
மாத்திரமே தாக்கப்பட்ட
ஒரு வீட்டில்
இருந்தனர். இச்சமயத்தில் சம்பவம் இடம்பெற்ற இடத்தில்
நின்ற அமைப்பாளர்
றியாஸ் வீடுகள்
மீது தாக்குதல்
மேற்கொண்டதுடன் எனக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இது
மாத்திரமல்லாமல் எங்கள் வீடுகளைச் சுற்றி அத்துமீறி
எங்களுக்கு எதிரானவரின் சுவரொட்டிகளை சட்ட விரோதமாக
ஒட்டியுள்ளார்.
இவரின்
இவ்வாறான அராஜக
செயல்களை மக்கள்
ஒரு போதும்
அங்கிகரிக்கமாட்டார்கள். இச்சம்பவங்கள் தொடர்பில்
கல்முனை பொலிஸ்
நிலையத்தில் முறையீடு செய்துள்ளோம். இவ்வாறு றஹ்மத்
மன்சூர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment