எதிர்வரும் 25 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரை

விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம்

அரசாங்கத்தால் பிரகடனம்

எதிர்வரும் 25 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரை விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம்எனவும் ஜனவரி 30 ஆம் திகதி சனிக்கிழமை விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய தினம் எனவும் அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரசாங்க கூட்டுத்தாபன மற்றும் நியதிச் சட்ட சபைகளின் தலைவர்களுக்கு அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இலக்கம் SP/SB/09/15 ஊடாக அதி மேதகு ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் விளையாட்டுத்துறை அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரைவிளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம்எனவும் ஜனவரி 30 ஆம் திகதி சனிக்கிழமை விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய தினம் எனவும் அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் அதி வேகமாகப் பரவுகின்ற தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக இத் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் சிறப்பான ஆரம்பம் ஒன்றை வழங்குவதே இதன் நோக்கமாகும்
2016 ஜனவரி 25 ஆம் திகதிஅரசாங்க மற்றும் அரசாங்க சேவைவிளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம்எனப் பெரிடப்பட்டுள்ளது. சுகதேசிகளான அரச அலுவலகர்களினூடாக வினைத்திறனும், வினைத்திறன் வாய்ந்த அரசாங்க சேவை ஒன்றை வழங்குவதை நோக்காகக் கொண்டு சகல அரசாங்க நிறுவனங்களிலும் தேகாரோக்கிய நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக 2016 ஜனவரி 25 ஆம் திகதி திங்கள் கிழமை முற்பகல் 8.30 மணிக்கு கீழே குறிப்பிடப்படும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
1)            சகல பணியாட் தொகுதியினரதும் முன்னே நிறுவன அல்லது அலுவலக தலைவரினால் தேசியக் கொடியேற்றல்.
2)            தேசியக் கொடியேற்றப்பட்டதன் பின்னர் தேசியக் கீதம் இசைத்தல்.
3)            சுகதேசிகளான அரச அலுவலகர்களினூடாக வினைத்திறனும், வினைத்திறன் வாய்ந்த அரசாங்க சேவை ஒன்றை வழங்குவது தொடர்பாக தேகாரோக்கிய உடற்பயிற்சிகள் மற்றும் போசாக்கின் முக்கியத்துவம் தொடர்பாக சுருக்கமாக விரிவுரை ஒன்று நடாத்தல்.
4)            சகல பணியாட் தொகுதியினரும் அலுவலக உடையில் கலந்து கொள்ளக்கூடியவாறு இலகுவான உடற்பயிற்சித் திட்டம் ஒன்றை (15 நிமிடம்) நடைமுறைப்படுத்தல். என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top