ஹிருணிக்காவின் கடத்தல் விவகார வழக்கு
26ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
ஐக்கிய
தேசியக் கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட
கடத்தல், ஹிருணிகாவினால்
நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு ஆகியவற்றின் காட்சிகளை
பரிசோதனைக்கு அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி
வழக்கு, கொழும்பு
மேலதிக நீதவான்
முஹம்மத் மிஹிரன் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை
விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, வெல்லம்பிட்டிய
பொலிஸாருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தெமட்டக்கொடயில்
நடந்த ஆட்கடத்தல்
சம்பவத்தை டிவிடி
(டிஜிட்டல் வேர்ஸடைல் டிஸ்க்) ஆகவும், ஹிருணிக்கா
பிரேமச்சந்திர எம்.பி, நடத்திய ஊடகவியலாளர்
மாநாட்டை டிவிஆர்
(டிஜிட்டல் வீடியோ ரெக்கோடர்)ஆகவும், மொறட்டுவைப்
பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்குமாறும் மேலதிக நீதவான் உத்தரவிட்டார்..
குறித்த
வழக்கு ஜனவரி
26ஆம் திகதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment