இனிவரும் காலங்களில்  வாகனங்களில்
பக்கவாட்டு கண்ணாடிகள் இருக்காது

புதிய தொழில் நுட்பம் விரைவில் அறிமுகம்



பின்னால் வரும் வாகனங்களை சாரதி பார்ப்பதற்காக பொருத்தப்பட்டிருக்கும் பக்கவாட்டு கண்ணாடிகளுக்கு பதிலாக சிறிய கேமிராக்கள் பொருத்தப்பட்டு எலக்ட்ரானிக் டிஸ்பிளே வழியாக பார்க்கும் புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகமாகவுள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பத்தை பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ அறிமுகப்படுத்தியிருக்கிறது
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் ஷோ ஒன்று அண்மையில் நடைபெற்றது. இதில் இந்த புதிய தொழிநுட்பம் காட்சிக்கு வைக்கப்பட்டது.
வழக்கமான, கன்வென்ஷனல் கண்ணாடிகளை பொறுத்தவரை டிரைவர் பின்னால் வரும் வாகனங்களை பார்க்க வேண்டும் என்றால் அவர் வலது மற்றும் இடது பக்க கண்ணாடிகளை திரும்பி பார்த்தால் மட்டுமே முடியும். ஆனால், இந்த புதிய எலக்ட்ரானிக் கேமிரா தொழில்நுட்பம் வாயிலாக டிரைவர் தலையை திருப்பாமலேயே நேரடியாக பின்னால் வரும் வாகனங்களை பார்க்கலாம். இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புகளும் குறையும்.

இதில், ஒரு எலக்ட்ரானிக் டிஸ்பிளேயில் 3 தனி தனி படங்களாக கேமிராக்கள் மூலம் பின்னால் வரும் வாகனங்களை பார்க்கலாம். குறிப்பாக, இரவு நேரங்களிலும் கூட தெளிவாக பார்க்க முடியும். அதேபோல், மழை மற்றும் பனிப்பொழிவின் போது பக்கவாட்டு கண்ணாடிகள் மழை நீரால் அல்லது பனித்துளிகளால் படிவதால் டிரைவரால் பின்னால் வரும் வாகனங்களை சரியாக பார்க்க முடியாது. ஆனால், இதில் அப்படி நடக்காது. எனினும், இந்த புதிய தொழில்நுட்பம் வருவதற்கு நீண்டகாலமாகும் என ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top