யாழ்பாணத்தில் மாபெரும் பட்டம் விடும்
போட்டி
67 வகையான வித விதமான
பட்டங்கள்
விண்ணில் பறக்கவிடப்பட்டன.
தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில்
மாபெரும் இராட்சத பட்டங்கள் ஏற்றும் போட்டி நேற்று 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை
இடம்பெற்றது. வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில்
பட்டம் விடும் போட்டிகள் வல்வெட்டித்துறை உதய சூரியன் கடற்கரையில் இடம்பெற்றது.
இந்த பட்ட விடும் போட்டியில் பல வடிவங்களை கொண்ட இராட்சத பட்டங்களை போட்டியாளர்கள்
வானில் பறக்க விட்டனர்.
.இந்தப் போட்டியில் கண்ணைக் கவரும் வகையில் வண்ண வண்ண வித
விதமான பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டதை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு
களித்தனர்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடத்தப்படும் பட்டப் போட்டிகள் வல்வெட்டித்துறை
சனசமூக நிலையத்தால் நடத்தப்பட்டு, நாட்டில் நடைபெற்ற யுத்தம் காரணமாக கைவிடப்பட்டது.
தொடர்ந்து 2010ஆம் ஆண்டிலிருந்து வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம்
இந்தப் போட்டியை நடத்தி வருகின்றன. தமிழர் திருநாள் தைப்பொங்கலை சிறப்பிக்கும்
வண்ணம் நேற்று பிற்பகல் மாபெரும் பட்டப் போட்டி வால்வெட்டித்துறையில் உள்ள
புனரமைக்கப்பட்ட உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்றது. சுமார் 67ற்கு மேற்பட்ட பட்டங்கள் போட்டியில்
பங்கெடுத்து வானில் பறந்திருந்தன.
இவற்றில் நடுவார்களால் தேர்வு செய்யப்பட்ட 20 பட்டங்களிற்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
யாழ்ப்பாணத்தின் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற மாபெரும் பட்டப் போட்டித்
திருவிழாவில் தாஜ்மகால், வர்ண மீன், காற்றலைப் பட்டம்,
ஸ்ரீ லங்கன் விமானம்,
பிரமிட், வேவு விமானம், பராக்கிளைடர், உழவு இயந்திரம், உதயசூரியன் இலச்சினை, இரட்டைக்கொக்கு, கொக்கு,மயில், படகு இயந்திரம், சிவன் மலை காட்சி,
நவீன போர் விமானம்,
திருக்கை மீன், பருந்து, வௌவால், முப்பரிமான பட்டம், பறக்கும் தட்டு, அனகோண்டா பாம்பு, டைனோசர் உள்ளிட்ட 67 வகையான வித விதமான பட்டங்கள் விண்ணில் பறந்தன.
பட்டத்திருவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற
வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்புரையாற்றியதுடன், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசும்
வழங்கினார்.
0 comments:
Post a Comment