கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும்
ஆசிரியர்களின்
எண்ணிக்கையும்
அவர்களின் கல்வித் தகைமைகளும்
கிழக்கு மாகாணத்தில் 20961 ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி போதனைகளுக்காக
நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என கல்வி அமைச்சின் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
இவர்களில் 12494 பேர் பெண்களாகவும் 8467 பேர் ஆண்களாகவும் உள்ளனர். தமிழ் மொழி
பாடசாலைகளில் 16182 ஆசிரியர்களும் சிங்கள மொழி பாடசாலைகளில் 4457 ஆசிரியர்களும்
கடமை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இம்மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4232 பெண் ஆசிரியர்களும் 2497 ஆண்
ஆசிரியர்களும் என மொத்தமாக 6729 ஆசிரியர்களும் அம்பாறை மாவட்ட்த்தில் 5348 பெண் ஆசிரியர்களும் 3624 ஆண் ஆசிரியர்களும் என மொத்தமாக 8972 ஆசிரியர்களும் திருக்கோணமலை மாவட்டத்தில் 2914 பெண் ஆசிரியர்களும் 2346 ஆண்
ஆசிரியர்களும் என மொத்தமாக 5260 ஆசிரியர்களும் அரச பாடசாலைகளில் கல்வி போதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் 100 ஆசிரியர்கள்(
Released to a Office) ஏனைய நடவடிக்கைகளுக்காக காரியாலயத்திற்கு
விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அம்பாறை மாவட்ட்த்தில் 47 ஆசிரியர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 19 ஆசிரியர்களும் திருக்கோணமலை மாவட்டத்தில் 34 ஆசிரியர்களும் இவ்வாறு காரியாலயத்திற்கு
விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இம்மாகாணத்தில் 3 பேர் MPhil.Ed தரத்திலும் 113 பேர் M.Ed தரத்திலும் 50 பேர் MA in Ed தரத்திலும் 3796 பேர் Dip in Ed தரத்திலும் 16 பேர் M.Sc in Edu.Mg தரத்திலும் 34 பேர் Post Gra.Dip .in Edu.Mgt தரத்திலும் 86 பேர் Post Gra.Dip. inEnglish(Secondlang.) தரத்திலும் 309 பேர் B.Ed தரத்திலும் 66 பேர் Dip. In English(Secondlang.) தரத்திலும் 6 பேர் Diploma in eacher Librarian தரத்திலும் 01 பேர் M.Sc in TeacherLibrarian தரத்திலும் 48 பேர் Diploma in Agriculture தரத்திலும் 5486 பேர் Teacher training certificate –inservice தரத்திலும் 3447 பேர் Teacher training certificate – distance தரத்திலும் 4457 பேர் National diploma in teaching தரத்திலும் 3043 பேர் Not Professio nally qualified தரத்திலும் உள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் 3169 பேர் 21 – 30 வயதிலும் 7419 பேர் 31- 40 வயதிலும் 7015 பேர் 41 – 50 வயதிலும்
2480 பேர் 51 – 55 வயதிலும் 512 பேர் 56 – 57 வயதிலும் 366 பேர் 58 - 60 வயதிலும் இருந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்களில் 894 பேர் அதிபர்களாகவும் 173 பேர் பதில்
அதிபர்களாகவும் 306 பேர் பிரதி அதிபர்களாகவும் 36 பேர் பதில் பிரதி அதிபர்களாகவும் 113 பேர் உதவி அதிபர்களாகவும் 14 பேர் பதில் உதவி
அதிபர்களாகவும் 19425 பேர் ஆசிரியர்களாகவும் பாடசாலைகளில் கடமை செய்கின்றனர்.
இம்மாகாணத்திலுள்ள மொத்த ஆசிரியர்களில் 6797 பேர் பட்டதாரி
ஆசிரியர்களாகவும் 13575 பேர் பயிற்றப்பட ஆசிரியர்களாகவும் 355 பேர் பயிற்சியற்ற
ஆசிரியர்களாகவும் 234 பேர் பயிலுநர் ஆசிரியர்களாகவும் இருந்து கொண்டிருக்கின்றனர்.
0 comments:
Post a Comment