இந்தோனேஷியா ஐ.நா.அலுவலகம்.அருகே
7 பேர் பலி பலருக்கு பலத்த
காயம்
மேற்கு
இந்தோனேஷியாவில் பலத்த
பாதுகாப்பு மிக்க பகுதிகளான ஐ.நா அலுவலகம் ஜனாதிபதி மாளிகை , உணவு விடுதி,
வணிக வளாகம் ஆகியவற்றின் அருகே
சரியாக இன்று காலை 10.40-க்கு அடுத்தடுத்து
குண்டுகள் வெடித்ததால் 4 ீவிரவாதிகள் உட்பட 7 பேர்
பலியாகியுள்ளதுடன் பலர் பலத்த காயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக் அங்கிருந்து
கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த
பகுதியில் அடுத்தடுத்து
4 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன. அந்த
பகுதியே புகை
மண்டலமானது.
உடனே
பொலிஸாரும்,
பாதுகாப்பு படையினரும் அங்கு விரைந்தனர். அப்போது
துப்பாக்கியுடன் இருந்த 14 தீவிரவாதிகள் பாதுகாப்பு படை
வீரர்களை நோக்கிச்
சுட்டனர். இருதரப்புக்கும்
இடையே கடுமையான
துப்பாக்கி சண்டை நடந்தது. இதனால் அந்த
பகுதிக்கு ஏராளமான
இராணுவ
வீரர்கள் அனுப்பப்பட்டனர்.
அவர்கள் தாக்குதல்
நடந்த 4 இடங்களையும்
சுற்றி வளைத்தனர்.
அங்கு
தொடர்ந்து துப்பாக்கி
சண்டை நடந்து
வருவதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. தீவிரவாதிகளில் சிலர் உணவு விடுதிக்குள்ளும்,
வணிக வளாகத்துக்குள்ளும்
புகுந்துள்ளனர். பாதுகாப்பு படையினரும் அங்கு புகுந்துள்ளதால்
அங்கும் துப்பாக்கி
சூடு சத்தம்
கேட்டவாறு இருக்கிறது.
இந்த
தாக்குதல் சம்பவத்துக்கு
இதுவரை எந்த
ஒரு இயக்கமும்
பொறுப்பேற்கவில்லை. உலகிலேயே மிகப்பெரிய
முஸ்லிம் நாடான
இந்தோனேஷியாவில் அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். இயக்க அனுதாபிகள்
நிறைய பேர்
உள்ளனர். அவர்களில்
யாராவது இந்த
தாக்குதலை நடத்தி
இருக்கலாம் என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளதாக செய்திகளில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. .
தாக்குதல்
நடந்த பகுதியில்
இராணுவச்
சோதனை சாவடிகளும்,
பொலிஸ் சோதனைச் சாவடிகளும்
அதிக அளவில்
உள்ளன. பலத்த
பாதுகாப்பையும் மீறி துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் தீவிரவாதிகள் நுழைந்தது அந்நாட்டு பாதுகாப்பு
படையினரை அதிர்ச்சி
அடையச் செய்துள்ளது.
துப்பாக்கி
சண்டை நடப்பதால்
இந்த 4 இடங்களிலும்
போக்குவரத்து நிறுத்தப்பட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று
பொலிஸார்ர்
எச்சரித்து உள்ளனர்.
ஐ.நா. அலுவலகத்தில்
உள்ள ஊழியர்கள்,
அதிகாரிகள் யாரும் வெளியே வர வேண்டாம்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலைத்
தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையைச்
சுற்றிலும் யாரும் நுழைய முடியாத படி
இராணுவம்
குவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் 14 ஆயிரம் தீவுக்கூட்டங்கள் அடங்கிய நாடு இந்தோனேஷியா. இதன் தலைநகரான ஜகார்த்தாவில் மேற்கு பகுதியில் ஜனாதிபதி மாளிகை, ஐ.நா. அலுவலகம் உட்பட முக்கிய அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளன.
0 comments:
Post a Comment