தொழிற்பயிற்சியில் ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகளுக்கு

தொழிற்பயிற்சி நிறுவனங்கள் தொடர்பில் எச்சரிக்கை


தேசிய தொழிற்பயிற்சி தகைமைச் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்வதற்காக தொழில் பயில்வோர் தாம் பயிற்சி பெறும் நிறுவனங்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் தேசிய தொழிற்பயிற்சி நிறுவன அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொழிற்பயிற்சியில் ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகள் முதலில் தேசிய தொழிற்பயிற்சி தகைமைச் சான்றிதழ்களை வழங்கும் நிறுவனங்கள் பற்றி அறிந்திருத்தல் அவசியம். இல்லையெனில், மோசடியான நிறுவனங்கள் மூலம் பண விரயமும் காலவிரயமும் மன உளைச்சலும் ஏற்படும்.
இலங்கை சட்டவாக்கத்தின்படி, தேசிய தொழில்நுட்ப தகைமைச் சான்றிதழ் வழங்குகின்ற நிறுவனங்களானது மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் கீழ் தொழிற்பயிற்சி நிலையங்களாகப் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். அங்கு வழங்கப்படுகின்ற தொழில்நுட்பப் பயிற்சிகள் மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருக்கவேண்டும். அவ்வாறுள்ள நிறுவனங்களே தேசிய தொழிற்பயிற்சி தகைமைச் சான்றிதழ்களை வழங்கமுடியும்.
சில தொழிற்பயிற்சி நிலையங்கள் மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்திருந்தபோதிலும், அந்தப் பதிவு மூன்று வருடங்களில் காலாவதியான பின்னரும் கூட தொடர்ந்தும் தொழிற்பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் வழங்குகின்றன.
எனவே, இத்தகைய மோசடிகளில் இளைஞர், யுவதிகள் சிக்கக்கூடாது. திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபை மூலம் ஆற்றலை வளர்த்துக்கொள்ளக்கூடிய சுமார் 15 இற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

பிரதேச செயலகப் பிரிவுகளில் செயற்படும் தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் இத்தகைய தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top