இந்திய பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட
மும்மது அப்சல் குருவின் மகன்
பரீட்சையில் 95 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து அசத்தல்



இந்திய பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக நிருபிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட முஹம்மது அப்சல் குருவின் மகன் காலிப் குரு 10-ம் வகுப்பு தேர்வில் 95 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்று வருகின்றான்.
அப்சல் குருவுக்கு இந்திய நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததையடுத்து 2013ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ம் திகதி அவர் தூக்கிலிடப்பட்டார்.
அப்சல் குருவின் மகன் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவண்டிபோரா பகுதியில்  தற்போது வசித்து வருகிறான்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநில பரீட்சைகள் திணைக்களம் 10-ம் வகுப்பு  பரீட்சை முடிவுகளை நேற்று வெளியிட்டது. இதில் காலிப் குரு 500-க்கு 474 மதிப்பெண்கள் எடுத்துள்ளான்.

மொத்தமுள்ள 5 பாடங்களிலும் அவர் -1 தரத்தில் சித்தி பெற்றுள்ளான். அப்சல் குருவின் மகன் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல்வேறு தரப்பினரும் காலிப் குருவிற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top