அபிவிருத்தியின்போது ஒவ்வொரு மாவட்டத்திற்கும்
வெவ்வேறு
விதமாக முன்னுரிமையளிப்பது
தனது அரசாங்கத்தின் கொள்கை அல்ல
அபிவிருத்தியின்போது
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வெவ்வேறு விதமாக முன்னுரிமையளிப்பது தனது
அரசாங்கத்தின் கொள்கை அல்ல என
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
பொலனறுவை
மாவட்ட மக்களின் வங்கி நடவடிக்கைகளை மேலும்
இலகுபடுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட வெலிக்கந்த இலங்கை வங்கிக் கிளை
இன்று 12 ஆம் திகதி செவ்வாய்கிழமை முற்பகல் திறந்து வைக்கப்பட்டபோதே ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன அவர்கள் இவ்வாறு
தெரிவித்தார்.
கடந்த
சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியின்போது பொலனறுவை மாவட்டத்திற்கு இளைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்குவதற்காக ”பிபிதெமு பொலனறுவை”
விசேட அபிவிருத்தித்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி மேலும்
இங்கு குறிப்பிட்டார்.
உர
தட்டுப்பாடு நிலவுவதாக இன்று ஒரு சிலர்
ஊடகங்களில் கருத்துத் தெரிவிப்பதுடன், தான் அதுபற்றி நேரடியாக்
கண்டறிந்ததாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டில் உர தட்டுப்பாடு நிலவவில்லை
எனவும் விநியோகத்தின்போதே சில குறைபாடுகள் நிகழ்ந்துள்ளதாகவும்
அவற்றை சீர்செய்வதற்குகான அறிவுறுத்தல்களை ஏற்புடைய பிரிவுகளுக்கு தான் வழங்கியதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும்
உரிய வேளைக்கு விவசாயிகளுக்குத் தேவையான உரம் மற்றும்
நீர் ஆகியவற்றை வழங்கி அவர்களது உற்பத்திகளுக்கு
சந்தை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்து பொருளாதார ரீதியில் அவர்களை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை
மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
2015 ஜனாதிபதி தேர்தலுக்கு
முன் கடந்த அரசாங்கத்தினால் இறக்குமதி
செய்யப்பட்ட பெருந்தொகையான அரிசி நுகர்வதற்கு பொருத்தமற்ற
நிலைமையில் இன்னமும் களஞ்சியங்களில் உள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி,
நாட்டின் பொருளாதாரம்பற்றி சிந்திக்காமல் மேற்கொள்ளப்பட்ட ஒரு சில நடவடிக்கைகள்
காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
இவ்
அரிசியை சதோச போன்ற அரச
நிறுவனங்களுக்கு வழங்காது தனியார் நிறுவனங்களுக்கு இரகசியமான
முறையில் கொண்டு செல்லப்பட்டதாகவும் தற்போது
அது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வெளிநாடுகளில்
இருந்து சோளம் இறக்குமதி செய்வதற்கு
அனுமதி கோரி அண்மையில் அமைச்சரவைக்கு
பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அதை தான் நிராகரித்ததாகவும்
குறிப்பிட்ட ஜனாதிபதி, விவசாயிகளின்
பொருளாதாரத்திற்கு பங்கம் ஏற்படும் எதுவித
தீர்மானமும் மேற்கொள்ள தான் இடமளிக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.
வெலிக்கந்த
விவசாயிகளின் வங்கி வசதிகளை விரிவுப்படுத்தி
நிர்மாணிக்கப்பட்ட வெலிக்கந்த இலங்கை வங்கிக் கிளை
சகல வசதிகளையும் கொண்டுள்ளது. நினைவுப்பேழையை
திரைநீக்கம் செய்து வைத்து, வங்கிக்
கிளையை திறந்து வைத்த ஜனாதிபதி,
முதலாவது விவசாயியின் பண வைப்பினை ஏற்றுக்கொண்டார்.
”பிபிதெமு பொலனறுவை” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பொலனறுவை மாவட்ட
பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும்
நிகழ்வு இங்கு இடம்பெற்றதுடன், இலங்கை
மகாவலி அதிகார சபையின் பி
வலய கமத்தொழில் சங்கத்தை மேம்படுத்துவதற்கான அலுவலக உபகரணங்கள், மக்கள்
பங்களிப்பு நீர்ப்பாசன முறைமை முகாமைத்துவத்திற்கான புல் வெட்டும்
இயந்திரம் வழங்குதலும் இங்கு இடம்பெற்றது.
அத்துடன்
அரலகங்வில விவசாயிகளின் வங்கி வசதிகளை விரிவுப்படுத்தி
நிர்மாணிக்கப்பட்ட இலங்கை வங்கியின் அரலகங்வில
கிளை இன்று முற்பகல் ஜனாதிபதி
அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
அரலகங்விலவை
சூழ உள்ள 30 கிராமங்களைச் சேர்ந்த
மக்களின் வங்கி நடவடிக்கைகளை இலகுவாக
மேற்கொள்வதற்கு இதன் மூலம் வாய்ப்பு
கிடைப்பதுடன், முதல் மூன்று வாடிக்கையாளர்களின்
வைப்புக்களை ஜனாதிபதி
அவர்கள் பொறுப்பேற்றார்.
0 comments:
Post a Comment