ஜம்மு- காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மது சயீத் மறைவு
மகள் மெஹபூபா அடுத்த முதல்வராகிறார்?
மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை அவர் பெறுவார்
ஜம்மு
காஷ்மீர் முதல்வர்
முப்தி முகம்மது சயீத், உடல்நலக் குறைவு
காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்
நேற்று காலமானார்.
அவருக்கு வயது
79. முப்தி மறைவை அடுத்து அவரது மகள்
மெஹபூபா முப்தி அடுத்த
முதல்வராக பதவியேற்க
உள்ளார்.
ஜம்மு
காஷ்மீர் மாநில
முதல்வர் முப்தி
முகம்மது சயீத் நிமோனியா
காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து,
கடந்த மாதம்
24-ம் திகதி
சிறப்பு விமானத்தில்
டில்லிக்கு
அழைத்து சென்று அவரை எய்ம்ஸ் மருத்துவமனையில்
சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை
அளித்தனர். எனினும், பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்
கப்பட்டு அவரது
இரத்த
அணுத் தட்டுகள்
கணிசமாக குறைந்தன.
இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு
தீவிர கண்காணிப்பில்
வைக்கப்பட்டார்.
இந்நிலையில்,
சையது நேற்று
காலை காலமானார்.
மறைந்த சயீதுக்கு மனைவி,
3 மகள்கள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.
காஷ்மீரில் பதவியில் இருக்கும்போது இறந்த 2-வது
முதல்வர் இவர்
என்பது குறிப்பிடத்
தக்கது. இவருக்கு
முன்பு கடந்த
1982-ம் ஆண்டு
செப்டம்பர் 8-ம் திகதி அப்போதைய முதல்வர் ஷேக்
முகம்மது
அப்துல்லா காலமானார்.
சயீத் மறைவையடுத்து காஷ்மீரில்
நேற்று விடுமுறை
அறிவிக்கப்பட்டது. மேலும் ஒரு
வாரத்துக்கு துக்கம் கடைபிடிக்கப் படும் என்று
மாநில அரசு
அறிவித் துள்ளது.
அதேபோல, நாடு
முழுவதும் தேசிய
கொடியை அரை
கம்பத்தில் பறக்கவிட மத்திய அரசும் உத்தரவிட்டது.
அடுத்த
முதல்வர் மெஹபூபா?
ஜம்மு
காஷ்மீர் முதல்வர்
முப்தி முகம்மது சயீத்
மறைவை அடுத்து,
அவரது மகள் மெஹபூபா முதல்வராக
பதவியேற்க உள்ளார்.
காஷ்மீரில்
பாஜ-மக்கள்
ஜனநாயக கட்சி
கூட்டணி அமைத்தது.
இதன் மூலம்
கடந்த ஆண்டு
மார்ச் மாதம்
முப்தி முகம்மது சயீத்
முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உடல்நலக்குறைவு அவர் நேற்று இறந்த நிலையில்,
அவரது மகள்
மெஹபூபாவை முதல்வராக தேர்வு
செய்ய உள்ளதாக
மக்கள் ஜனநாயக
கட்சி தெரிவித்துள்ளது.
87 உறுப்பினர்களை
கொண்ட காஷ்மீர்
சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 உறுப்பினர்களும்,
பாஜவுக்கு 25 உறுப்பினர்களும் உள்ளனர். மெஹபூபாவை முதல்வராக தேர்வு
செய்ய பாஜ.வும் பச்சைக்கொடி
காட்டியுள்ளது. இதையடுத்து மக்கள் ஜனநாயக கூட்டணி
கட்சி்யின் சார்பில், மெஹபூபாவை முதல்வராக தேர்ந்தெடுக்க ஆதரவு
தெரிவித்து மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மெஹபூபா
முதல்வராகப் பதவியேற்கும்பட்சத்தில், ஜம்மு காஷ்மீர்
மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற
பெருமையை அவர்
பெறுவார்.
0 comments:
Post a Comment